Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா டெஸ்ட் கிட் கொள்முதல்- தாமதம் ஏன்?.. என்ன நடக்கிறது.. புனே மருத்துவக்கல்லூரி சென்னையில் கொள்முதல்..

கொரோனா டெஸ்ட் கிட் கொள்முதல்- தாமதம் ஏன்?.. என்ன நடக்கிறது.. புனே மருத்துவக்கல்லூரி சென்னையில் கொள்முதல்..

        தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஊரடங்கு உத்தரவு 24/3/2020இரவு 12 மணிக்கு அமுலுக்கு வந்தது. தமிழக அரசின் 144 தடையுத்தரவு 23ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 24.3.2020 மாலை 6மணிக்கு நடைமுறைக்கு வந்தது. ஆனால் 22.3.2020ம் தேதி மாலை 5மணிக்கு  கொரோனா கைதட்டும் விழா இனிது முடிந்தது.

ஆனால் 30ம் தேதிதான் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பில் -1.50 கோடி முக கவசங்கள், 25 லட்சம் – என் 95′ முக கவசம், 11 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள், 2,500 வென்டிலேட்டர்கள்,30 ஆயிரம், ‘டெஸ்ட் கிட்’ என்ற, பரிசோதனை கருவிகள் வாங்க, ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தலைமைச் செயலகத்தில் கொடுத்த பேட்டி வேடிக்கையாக உள்ளது.

  கொரோனா டெஸ்கிட்  இருங்காடுக்கோட்டையில் உள்ள ஹோண்டாய் கார் நிறுவனம், கொரியாவிலிருந்து கொண்டு வந்து, கார் நிறுவனத்தின் கொரியா நிர்வாகிகள் உள்ளிட்ட கார் கம்பெனியின் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆய்வு செய்துள்ளது.  ஒரு டெஸ்ட் கிட் மூலம் 25,000 பேருக்கு பரிசோதனை செய்யலாம் என்கிறார்கள்.

  B.J.Govt medical college & sasson General Hospital புனே இந்த மருத்துவக்கல்லூரி சென்னை சைதாப்பேட்டையில் செயல்படும்   TechBio solutions Chennai நிறுவனத்திடம்   COVID-19 கொள்முதல் செய்து, 27.3.2020ல் TOP –PRIORITYயில் கடிதம் கொடுத்து, புனேவுக்கு கொண்டு சென்று கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆய்வு செய்ய தொடங்கிவிட்டது.

 சென்னையில் கொரோனா கிட், புனாவில் மருத்துவக்கல்லூரி கொள்முதல் செய்துள்ளது. ஆனால்  தமிழக அரசு டெஸ்ட் கிட் அதாவது பரிசோதனை கருவி கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக 30.3.2020 அன்று முதல்வர் பேட்டியளிப்பது வேடிக்கையாகவும் இருக்கிறது.. அதைவிட வேதனையாகவும் இருக்கிறது. கொள்முதல் செய்வதில் ஏன் தாமதம் என்ற கேள்வி எழுந்துள்ளது..

 TechBio solutions Chennaiயில் டெஸ்ட் கிட் கிடைக்கும் போது கொள்முதல் செய்வதில் என்ன பிரச்சனை..

  தினமும் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலாராஜேஷ்தாஸ் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பேட்டி கொடுப்பதை விட, கொரோனா டெஸ் கிட் கொள்முதல் செய்து, கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

 கொரோனா டெஸ்ட் கிட், முக கவசங்கள், வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்வதில் கமிசன் பிரச்சனை, அதனால்தான் கொள்முதல் தாமதமாகிறது  என்று தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் அதிகாரிகள் புலம்புகிறார்கள்..

  வாக்களித்து உங்களை ஆட்சியில் அமரவைத்த தமிழக மக்களை கொரோனா நோயிலிருந்து காப்பாற்றுங்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *