Breaking News
Home / பிற செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயில் மூடப்படவில்லை.. போத்திகள் VS அய்யர்கள்..

திருச்செந்தூர் முருகன் கோயில் மூடப்படவில்லை.. போத்திகள் VS அய்யர்கள்..

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்டு இருப்பதால் அனைத்து கோயில்களிலும் காலை பூஜைக்கு பிறகு கோயில் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கோயில்களும் மூடப்படுகிறது, பொது மக்களுக்கு அனுமதிப்பது இல்லை.

 ஆனால் திருச்செந்தூர் முருகன் கோயில் காலை பூஜைக்கு பிறகு மூடப்படுவதில்லை. மூலஸ்தானத்தில் போத்திகள் மட்டுமே முருகனை தொட்டு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளை செய்ய முடியும். அய்யர்கள் மக்கள் அர்ச்சனை தட்டுக்களை பெற்று, தேங்காயை உடைத்து போத்திகளிடம் தான் கொடுப்பார்கள்.

 அரசு உத்தரவை மீறி 30க்கு மேற்பட்ட அய்யர்கள் தினமும் காலையில் முருகன் கோயில் அத்து மீறி நுழைந்து, வெளியே நிற்கும் மக்களிடம் அர்ச்சனை தட்டுக்களை வாங்கி சென்று அர்ச்சனை செய்கிறார்கள். அர்ச்சனை தட்டு கொடுத்த மக்களுக்கு பிரசாதம் கொடுக்கிறார்கள்..

 28.3.2020 அன்று முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்தார்கள். 28.3.2020 காலை 32 அய்யர்கள், வெளியில் காத்திருக்கும் மக்களிடம் சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பு அர்ச்சனை என்று தட்டுக்களை வாங்கிச் சென்று முருகனுக்கு அர்ச்சனை செய்து,  மக்களிடம் பிரசாதத்தை தந்தார்கள். இந்த அர்ச்சனைக்கு மக்களிடம் தலா ரூ500 என வசூல் செய்துவிட்டார்கள்..

 அரசு உத்தரவுப்படி பூஜை செய்துவிட்டு, கோயிலை மூட வேண்டும், மக்களிடம் அர்ச்சனை தட்டுக்களை பெற்றும் வந்து அர்ச்சனை செய்யக்கூடாது என்று போத்திகள் கூறுவதால், கோயிலுக்குள் போத்திகளுக்கும், அய்யர்களுக்கும் மோதல் தினமும் நடந்து வருகிறது.

தினமும் சட்ட விரோதமாக நடக்கும் அர்ச்சனைக்கு மக்களிடம் செய்யப்படும் வசூலில்  கோயில் கண்காணிப்பாளர் மாரிமுத்துவுக்கு தினமும் கணிசமான தொகை மாமூலாக கொடுக்கப்படுவதால், இந்த சட்ட விரோத அர்ச்சனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். தற்போது யாகமும் நடந்துக்கொண்டு இருக்கிறது,,

  திருச்செந்தூர்  முருகன் கோயில் இணை ஆணையர் அம்ரித் ஐ.ஏ.எஸ்யிடம் போத்திகள் புகார் செய்தும், கண்டுகொள்ளவில்லை.

 தினமும் மக்களிடம் அர்ச்சனை தட்டுக்களை வாங்கி பூஜை செய்வதை பாபு நாராயணன் தன் முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார்..

 பிரதமர் மோடி, தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பொருந்தாதா?

 திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குப்படுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *