Breaking News
Home / பிற செய்திகள் / ஈஷா யோகா மையம்- கோரோனாவுக்காக தனிமைப்படுத்தபடுமா? கொரோனா பற்றி சத்குருவிடம் பேசிய சீனர்..

ஈஷா யோகா மையம்- கோரோனாவுக்காக தனிமைப்படுத்தபடுமா? கொரோனா பற்றி சத்குருவிடம் பேசிய சீனர்..

  ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா மூலம் கோரோனா நோய் சமூக பரவலாக மாற வாய்ப்பு உள்ளது.

ஈஷா யோகாமையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் 21.2.2020 மாலை 6மணி 22.2.2020 காலை 6மணி வரை சிவராத்திரி விழா நடத்தினார். இந்த விழாவில் உலகம் முழுவதிலிருந்து பல லட்சம் பேர் கலந்துக்கொண்டார்கள். சிவராத்திரி விழாவில்  சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு  பங்கேற்றார்.

 சீனா, ஜெர்மன், ருஷ்யா, யூ.கே, லாஸ் –ஏஞ்சல்ஸ், ஜப்பான், கொரியா, லெபனான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து சிவராத்திரி விழாவில் கலந்துக்கொண்டார்கள். சீனாவிலிருந்து பலர் வந்திருந்தார்கள். சீனாவிலிருந்து  வந்த XIuhang  சீனர் கொரோனாவால் நிறைய சீனர்கள் வரமுடியவில்லை, சத்குரு கொரோனா குறித்து பேச வேண்டும் என்று சிவராத்திரி விழாவில் பேசினார். இதை இந்தியா டூடே டிவிக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

 லெபனான் ட்ரம்மர்ஸ் மற்றும் கபீர் கேப் குழ்வினர் இசை நிகழ்ச்சி நடந்தது.

 கொரோனா வைரஸ் சமூக பரவலாவதை தட்க்க, பிப்ரவரி 15 முதல் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 கடந்து இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டுக்கு அதிகமாக வெளி நாட்டவர்கள் வந்து கலந்து கொண்ட பெரிய விழா ஈஷா யோகா மையத்தில் 21.2.2020 அன்று நடந்த சிவராத்திரி விழாதான்..

 நாடு நெருக்கடியான நிலையை சந்திக்க உள்ள  நிலையில் கொரோனா நோய் தொற்றுள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் கலந்துக்கொண்டவர்களின் விவரங்களை  ஜக்கி வாசுதேவ் தெரிவிக்கவில்லை. இதுவே சட்ட விரோதம்…

 ஈஷா யோகாமையத்தை முதலில் தன்னிலைப்படுத்தி, சீல் வைத்து அங்கு தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா நோய் உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.

 கொரோனா நோயின் மூன்றாம் கட்ட சமூக பரவலை கட்டுப்படுத்த சிவராத்திரி விழா கலந்துக்கொண்டவர்களின் விவரங்களை தமிழக அரசு சேகரித்து, உடனடியாக அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்..அப்போதுதான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.

 ஜக்கி வாசுதேவிடம் விசாரணை நடத்த வேண்டும்..ஈஷா யோகா மையத்துக்கு சீல் வைக்க வேண்டும்,..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *