Breaking News
Home / பிற செய்திகள் / பூந்தமல்லி நகராட்சியா… குப்பை குவியல் நகராட்சியா..

பூந்தமல்லி நகராட்சியா… குப்பை குவியல் நகராட்சியா..

பூந்தமல்லி நகராட்சியில் எந்த பக்கம் சென்றாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 25லிட்டர் கிருமி நாசினி மருந்தில் 1000 லிட்டர் தண்ணீர் கலந்து போக்கிங் மெஷின் மூலம் தெளிக்கப்படுகிறது. 25லிட்டர் கிருமி நாசினி மருந்தில் 1000 லிட்டர் தண்ணீர் கலந்து அடிப்பதற்கு அடிக்காமலேயே இருக்கலாம்..

      கொரோனா வைரஸ் அறிகுறியால்  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்த ஒருவருக்கு கொரோனா தாக்கப்பட்டதால், அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

 மேலும் முல்லாத்தோட்டம், சுமித்ரா நகர், மசூதி 2வது தெரு, எஸ்.எஸ்.கே.வி பகுதியில் ஒருவர் என நான்கு பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 27.3.2020 முதல்  தனிமைப்படுத்துப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறாமல் இருக்க குப்பைகளை அகற்ற வேண்டும்.கொரோனா வைரஸ்யால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள், குப்பையில் வீசிய பொருட்கள் மூலம் பரவ வாய்ப்பு உள்ளது.

 ஆனால் பூந்தமல்லி நகராட்சி குப்பை குவியலில் மிதக்கிறது.  பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

  குப்பை குவியலாக காட்சியளிக்கும் பூந்தமல்லி நகராட்சியை… இனி குப்பை குவியல் நகராட்சி என்றுதான் அழைக்க வேண்டுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *