Breaking News
Home / பிற செய்திகள் / பூந்தமல்லி நகராட்சி முடங்கி போனதா! குவியும் குப்பைகள்.. கிருமி நாசினி தெளிக்கவில்லை,..

பூந்தமல்லி நகராட்சி முடங்கி போனதா! குவியும் குப்பைகள்.. கிருமி நாசினி தெளிக்கவில்லை,..

பூந்தமல்லி நகராட்சி நிர்வாகமே முடங்கி போய்விட்டது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, 144தடையுத்தரவு அமுல்படுத்தி நான்கு நாட்களாகியும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

 அறிஞர் அண்ணா பள்ளியின் எதிரில், கண் பார்வை தெரியாதவர்களுக்கான பள்ளிக்கு அருகில் உள்ள  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் உள்ள குடியிருக்கும் ஒருவர் 11ம் தேதி மும்பாயில் இருந்து பூந்தமல்லி வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதே 27.3.2020 மாலைதான் பூந்தமல்லி நகராட்சிக்கு நிர்வாகத்துக்கே தெரிந்துள்ளது.

  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் உள்ள, அறிஞர் அண்ணா பள்ளிக்கு அருகில் உள்ள நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை போட்டோவில் பாருங்கள்..

  மாஸ்க் போடுவதால், கையை பல முறை கழுவுவதால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியாது. கொரோனா வைரஸ்யால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களால் கூட கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கு…

  பூந்தமல்லி நகராட்சியை Ourland engineering works pvt ltd நிறுவனத்திடம் அடகு வைத்துவிட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 Ourland engineering works pvt ltd நிறுவனத்துக்கு குப்பைகளை அகற்ற மாதா, மாதம் ரூ25-ரூ30 இலட்சம் நகராட்சி நிர்வாகம் கொடுக்கிறது. குப்பைகளை அகற்ற மாதம்  செலவு செய்யப்படும் தொகை ரூ40இலட்சம்.

 இரண்டு வயதானவர்கள் இறந்து போய்விட்டார்கள், அந்த பகுதியில் பளிச்சிங் பவுடர் கூட தெளிக்கவில்லை..

   ஆனால் கொரோனா வைரஸ்யை  கட்டுப்படுத்த, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரப்பிரிவில் அதிகாரிகளிடம் கிருமி நாசினி தெளிக்கவில்லை, குப்பை அப்புறப்படுத்தவில்லை என்று  எதை கேட்டாலும் Ourland engineering works pvt ltd நிறுவனத்தை கைக்காட்டுகிறார்கள்..

 பூந்தமல்லி நகராட்சியில் சுகாதார பணியாளர்கள் இல்லையா? குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை ஏன்.. என்ற கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைக்கவில்லை.

 பூந்தமல்லி நகராட்சியில் வாழும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கிறார்கள்…

   (குவிந்து கிடக்கும் குப்பை புகைப்படங்கள் இன்று காலை 7.15க்கு எடுக்கப்பட்டது)

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *