Breaking News
Home / பிற செய்திகள் / அமைச்சர் வெல்லமண்டி நடராசன்- அமைச்சர் வளர்மதி எங்கே? மக்களைப்பற்றி கவலைபடாத அமைச்சர்களா?..

அமைச்சர் வெல்லமண்டி நடராசன்- அமைச்சர் வளர்மதி எங்கே? மக்களைப்பற்றி கவலைபடாத அமைச்சர்களா?..

   அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி மக்கள் நலனில் அக்கரை காட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

   உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் கொரானோ வைரஸை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .

  திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி இரு அமைச்சர்கள் இருந்தும் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மிகவும் மந்த நிலையில் இருப்பதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது

 அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் தன் சொந்த தொகுதியான கிழக்கு தொகுதி மக்களை இதுவரை எட்டி கூட பார்க்கவில்லை என்றும் தமிழக அரசின் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நிலையில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை கிடைக்கிறதா? இல்லையா? என்று தங்களின் குறைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திருச்சி மாவட்ட மக்கள் புலம்புகிறார்கள்…

  இதே போல ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திருமதி வளர்மதி கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை எந்தளவிற்கு நடைமுறை படுத்தபட்டு உள்ளது என்றும்  ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நேரத்தில் பொது மக்களின்  வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பது பற்றியும் அக்கரை செலுத்தவில்லை என்ற குற்றசாட்டையும்  மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

 திருச்சி மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து சென்று விட்டால் மக்களின் பிரச்சனைகளும்,தேவைகளும் நிறைவேறிவிடுமா?

  கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஐ.ஏ.எஸ் ஆகியோர் 4000 லிட்டர் கிரிமி நாசினி லைசால் மருந்தை  சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கொடுப்பது போல் போட்டோ வெளியாகி உள்ளது. 27ம் தேதி வரை கிருமி நாசினி திருச்சியில் தெளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் இந்த நேரத்தில் உதவாமல் இருக்கும்  இரண்டு அமைச்சர்களும் எப்போது வந்து எங்களுக்கு உதவி செய்ய போகிறார்கள் என்று திருச்சி மாவட்ட மக்கள் கேட்கும் கேள்வி நியாயமாகதான் இருக்கிறது.

 அமைச்சர் வெல்லமண்டி நடராசனின் உறவினர், இந்து அறநிலையத்துறையின் பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையருமான ஜோதிலட்சுமி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். ஜோதிலட்சமியை காப்பாற்ற முயற்சி செய்யும் அமைச்சர் வெல்லமண்டி நடராசன், வாக்களித்த மக்களை மறந்துவிட்டதுதான் வேடிக்கையாக உள்ளது.

   எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு வாக்களித்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் மக்களுக்கு கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் அத்தியவாசிய தேவைகளையும் உடனுக்குடன் கிடைக்க அரசு எந்திரங்களையும் முடுக்கி விட வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்கள் விரும்புகிறார்கள்..

 மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்.. அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் வளர்மதியை  காணவில்லை என்று சமூக வலைதளங்களில் செய்தியாகிவிடாதீர்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழக அரசின்… வருவாய்த்துறை & சுகாதாரத்துறை கொரோனா நிதி ஒதுக்கீடுகளில் தொடரும் மர்மம்… காவல்துறைக்கு ரூ6கோடி எதற்கு?…

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறையிலும் கொரோனா தொடர்பான நிதி ஒதுக்கீடு அரசாணைகளில் மர்மம் தொடருகிறது. பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *