Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி மாவட்டம்- சட்டம் & ஒழுங்கு மோசம் அசாதாரண சூழல்.. சண்முகநாதன் கார் மீது தாக்குதல்..

தூத்துக்குடி மாவட்டம்- சட்டம் & ஒழுங்கு மோசம் அசாதாரண சூழல்.. சண்முகநாதன் கார் மீது தாக்குதல்..

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை மோசமாகி, அசாதாரண சூழல் நிலவுவதாக   மாவட்ட தேர்தல் அலுவலரும், துணை பதிவாளர்(பால்வளம்) அறிக்கை வெளியிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TUT 20 தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான நிர்வாகக்குழு தேர்தலில்  அமைச்சர் கடம்பூர் ராஜ், சண்முகநாதன் கூட்டணி மாவடி பண்ணை விஜயகுமாரை தலைவராக்க முடிவு செய்தார்கள்.   அமைச்சர் கடம்பூர் ராஜ் வேட்பாளர் மாவடி பண்ணை விஜயகுமாருக்கு எதிராக அதிமுக அமைப்பு செயலாளர்  சின்னதுரை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

 வேட்புமனு பரிசிலனையில் அமைச்சர் கடம்பூர்ராஜ், சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆதரவாளர்களின் பல மனுக்கள்  நிராகரிக்கப்பட்டது. அமைப்பு செயலாளர் சின்னதுரை வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருந்த காரணத்தால், அமைச்சர் கடம்பூர் ராஜ், சண்முகநாதன் எம்.எல்.ஏ தேர்தல் அதிகாரியை மிரட்டியதால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, அசாதாரண சூழல் நிலவுவதாக அறிக்கை வெளியிட்டு தேர்தல்  நிறுத்தி வைக்கப்பட்டது.

 உண்மையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மோசமாகதான் உள்ளது.

 ஸ்ரீவைகுண்டத்தில் மேடை பிள்ளையார் கோயில் அருகே சண்முகநாதன் எம்.எல்.ஏ  சென்ற கார் சில நாட்களுக்கு முன்பு மறிக்கப்பட்டு, கலவர சூழ்நிலை ஏற்பட்டது. கால்வாய் கிராம பஞ்சாய்த்து தேர்தலில் அதிமுக சார்பில் சேகர் போட்டியிட்டார். சேகரை எதிர்த்து, தேமுதிக  முருகையாபாண்டியன் போட்டியிட்டார். சேகர் வெற்றி பெற்றார். அதிமுக சேகரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக முருகையாபாண்டியன் நடத்திய கபடி போட்டியில் கலந்துக்கொள்ள சண்முகநாதன் எம்.எல்.ஏ சென்ற போதுதான், சேகர் மற்றும் சேகர் ஆதரவாளர்கள் சண்முகநாதன் சென்ற காரை வழி மறித்தார்கள்.. காரை வேகமாக செலுத்தி, தப்பித்தார் சண்முகநாதன்…

சண்முகநாதன் எம்.எல்.ஏக்கு நாளுக்கு நாள் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்..

 அமைச்சர் கடம்பூர் ராஜ், சண்முகநாதன் எம்.எல்.ஏ கூட்டணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இருவரையும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மதிப்பதில்லை என்பது உண்மை.

 தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜ், சண்முகநாதன் எம்.எல்.ஏ கூட்டணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு மோசமாகிவிட்டது…அதிமுக கட்சியின் நிலைமையும் மோசமாகிவிட்டது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *