Breaking News
Home / பிற செய்திகள் / சுதாதேவி ஐ.ஏ.எஸ் & சுதன் ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பா?- TNCSC &TNPSC முறைகேட்டில் சிக்கியவர்கள்..

சுதாதேவி ஐ.ஏ.எஸ் & சுதன் ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பா?- TNCSC &TNPSC முறைகேட்டில் சிக்கியவர்கள்..

சுதாதேவி ஐ.ஏ.எஸ்…

     இமாச்சலபிரதேசத்திலிருந்து Inter cadre Deputationல் தமிழ்நாட்டுக்கு வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் 7.7.2017ல் சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். சத்துணவு முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டிபுட்ஸ் குமாரசாமி அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரி சோதனை நடந்த போது, சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. பல ஆவணங்கள் சிக்கியது.

 ஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வருமான வரித்துறை சோதனைக்கு பிறகும், நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து மாற்றப்படவில்லை. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை வளையத்தில் இருந்தவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

 சுதன் ஐ.ஏ.எஸ்..

 மணிப்பூர் மாநிலத்திலிருந்து Inter cadre Deputationல் தமிழ்நாட்டுக்கு வந்த சுதன் ஐ.ஏ.எஸ் 10.1.2018ல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாடு(Controller of Examination)அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சியில் நடைபெற்ற அனைத்து மோசடிகளுக்கு முக்கிய காரணமானவர். தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் தெரியாமல் விடைத்தாள் மோசடி நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

 சுதாதேவி ஐ.ஏ.எஸ் நுகர்பொருள்வாணிப கழகத்தின் முறைகேட்டில் சிக்கியுள்ளார் .சுதன் ஐ.ஏ.எஸ் டி.என்.பி.எஸ்.சி மோசடியில் சிக்கியுள்ளார். இருவரின் Inter cadre Deputation மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. அதன்படி Inter cadre Deputation ஜுலை 2020 உடன் முடிந்துவிடுகிறது.

 சுதாதேவி ஐ.ஏ.எஸ், சுதன் ஐ.ஏ.எஸ் இருவரும் கிறிஸ்டிபுட்ஸ் குமாரசாமியின் உறவினர்கள். அதனால் இருவரின் Inter cadre Deputation நீட்டிக்க முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு இருவரின் Inter cadre Deputation நீட்டிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறது.

 மேலும் சுதாதேவி ஐ.ஏ.எஸ், சுதன் ஐ.ஏ.எஸ் இருவரையும் நிரந்தரமாக தமிழக கேடருக்கு மாற்ற அதிகாரமையத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *