Breaking News
Home / பிற செய்திகள் / சட்ட விரோதமாக EVP FILM CITY.. மக்கள்செய்திமையம் 19.6.2018ல் காவல்துறையில் அளித்த புகார் எங்கே? – காலா, பிக்பாஸ், பிகில், இந்தியன் -2 தொடர் விபத்து..

சட்ட விரோதமாக EVP FILM CITY.. மக்கள்செய்திமையம் 19.6.2018ல் காவல்துறையில் அளித்த புகார் எங்கே? – காலா, பிக்பாஸ், பிகில், இந்தியன் -2 தொடர் விபத்து..

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல், சட்ட விரோதமாக EVP FILM CITY செயல்பட்டு வருகிறது.

  19.2.2020 இரவு 10 மணிக்கு EVP FILM CITYயில் இந்தியன் -2 படப்பில் ராட்சத கிரேன் விபத்தில் மது, சந்திரன் மற்றும் உதவி இயக்குநர் கிருஷ்ணா மூவரும் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

 காலா படப்பிடிப்பு, பிக்பாஸ்-2, பிகில் படப்பிடிப்புகளில் விபத்து நடந்தது. ஆனால் புகார் அளிக்கவில்லை ஏன்?

 தற்போது லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மீது உள்ளிட்ட சிலர் மீது நசரத்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.. வேடிக்கையாக உள்ளது.

  சென்னை செம்பரம்பாக்கத்தில் EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு பூங்கா அமைக்க மட்டுமே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையர் கே.செல்வராஜ், ந.க.எண்.4646/09/அ3 நாள் 6.3.2010ல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு அமைக்க மட்டும் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளார். ஆனால் ஊராட்சி தீர்மானத்தில் திறந்த வெளி திரையரங்கம் அமைக்க என்று கூறப்பட்டுள்ளது.

31.3.2010ல் டாக்டர் தாமரைச்செல்வி துணை இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை 31.3.2010ல் EVP perumalsami and padmavathi education Trust எழுதிய கடிதத்தில்  EVP world –Educational and Cultural Garden என்று குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால் EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு பூங்கா அமைக்கவில்லை. பெரிய அளவில் படப்பிடிப்பு நடத்த ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

  1. 2017ல் காலா படப்பிடிப்பில் மைக்கேல் என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

2.  2018ல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏசி மெக்கானிக் குணசேகரன், படுகாயமடைந்தார். ஆனால் குணசேகரன் நிலை என்ன என்று தெரியவில்லை.

3. பிகில் படப்பிடிப்பு நிகழ்ச்சியில் செல்வராஜ் என்பவர் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். செல்வராஜ் நிலை என்ன என்று தெரியவில்லை.

  சட்டத்துக்கு புறம்பாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் EVP FILM CITY செயல்படுவதாக மக்கள்செய்திமையம் 19.06.2018ல் சென்னை மாநகர  காவல்துறைக்கு ஆன் –லைனில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மீது நடவடிக்கையே எடுக்கப்படவில்லை. 19.6.2018ல் அளித்த புகார்24.6.2018 வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை . சில நாட்கள் கழித்து வழக்கம் போல் புகாரை வருவாய்த்துறை அனுப்பிவிட்டு, கோப்பை மூடிவிட்டார்கள்.

  சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் செயல்படும் EVP FILM CITYயை மூட வேண்டும். EVP FILM CITYக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பாக  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரிரவிக்குமார் ஐ.ஏ.எஸ் அறிக்கை வெளியிட வேண்டும்.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *