Breaking News
Home / பிற செய்திகள் / இந்தியன் -2 படப்பிடிப்பு – கிரைன் விபத்து 3 பேர் பலி- சட்டத்துக்கு புறம்பாக EVP FILM CITY..

இந்தியன் -2 படப்பிடிப்பு – கிரைன் விபத்து 3 பேர் பலி- சட்டத்துக்கு புறம்பாக EVP FILM CITY..

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல், சட்டத்துக்கு புறம்பாக  EVP FILM CITY செயல்பட்டு வருகிறது.

  19.2.2020 இரவு 10 மணிக்கு EVP FILM CITYயில் இந்தியன் -2 படப்பில் ராட்சத கிரைன் விபத்தில் மது, சந்திரன் மற்றும் உதவி இயக்குநர் கிருஷ்ணா மூவரும் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

  சென்னை செம்பரம்பாக்கத்தில் EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு பூங்கா அமைக்க மட்டுமே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையர் கே.செல்வராஜ், ந.க.எண்.4646/09/அ3 நாள் 6.3.2010ல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு அமைக்க மட்டும் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளார். ஆனால் ஊராட்சி தீர்மானத்தில் திறந்த வெளி திரையரங்கம் அமைக்க என்று கூறப்பட்டுள்ளது.

 9.1.2010ல் ஈ.வி.பி பெருமாள்சாமி பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்பிய கடிதத்தில் நமது நாட்டில் அந்நிய செலவாணியை அதிகபடுத்த, தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலா வளர்ச்சி ஏற்படுவதால், சுற்றுப்புற கிராம மக்களின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பு பெருக EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு பூங்கா அமைக்க அனுமதி கேட்டுள்ளார்.

 31.3.2010ல் டாக்டர் தாமரைச்செல்வி துணை இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை 31.3.2010ல் EVP perumalsami and padmavathi education Trust எழுதிய கடிதத்தில்  EVP world –Educational and Cultural Garden என்று குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால் EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு பூங்கா அமைக்கவில்லை. பெரிய அளவில் படப்பிடிப்பு நடத்த ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் அங்குதான் நடந்தது. ரஜினி படம் உள்ளிட்ட பல திரைபடங்களின் படப்பிடிப்பு மட்டும் நடக்கிறது.

  உள்ளூர் கிராம மக்களுக்கு ஒருவருக்கு கூட EVP world  கல்வி, கலாச்சார பொழுது போக்கு பூங்காவில் வேலை கிடைக்கவில்லை.

  சட்டத்துக்கு புறம்பாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் EVP FILM CITY செயல்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  சட்டத்துக்கு புறம்பாக EVP FILM CITY மூட வேண்டும். EVP FILM CITYக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பாக  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரிரவிக்குமார் ஐ.ஏ.எஸ் அறிக்கை வெளியிட வேண்டும்.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *