Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…

தூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…

தூத்துக்குடி இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர்  புதிய அலுவலகம் ரூ25 இலட்சத்தில்  கட்டி முடிக்கப்பட்டு 19.11.2009ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த  சம்பத் ஐ.ஏ.எஸ், திருநெல்வேலி இணை ஆணையர் தனபால் கலந்துக்கொண்டார்கள்.

 நான்கு மாதங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகம் 5 அடி பூமியில் இறங்கியது. உடனடியாக உதவி ஆணையர் அலுவலகம், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

 பூமிக்குள் 5 அடி புதைந்த அலுவலகத்தை மீண்டும் சீர் செய்ய ரூ25 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ25 இலட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்யாத காரணத்தால், கட்டிடம் பழுதடைந்து போகலாம், ஆனால் கட்டிடமே 5 அடி பூமியில் இறங்கி உள்ளதை பார்க்கும் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகளும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும்  வாங்கிய கமிசன் மீது நமக்கு  ஞாபகத்துக்கு வருகிறது.  

அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தூத்துக்குடி மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் சொல்லுவார்களா?

  அரசு அலுவலகங்களின் கட்டுமான பணியின் மோசமான நிலை, தூத்துக்குடி இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அலுவலகம் பூமியில் புதைந்த படங்களே சாட்சி…

Comments

comments

About mani bharathi

Check Also

திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த                          SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *