Breaking News
Home / பிற செய்திகள் / மறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…

மறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் 2015-16, 2016-17,2017-18,2018-19 ஆகிய நான்கு ஆண்டுகளில் நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலி மனை வரி விதிப்பு, அபிவிருத்த கட்டணம் வசூலிக்காமல் நகரமைப்பு பிரிவில் இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்கியதால் நகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  1. ராமசுப்ரமணியன் சர்வே எண்.347/6625,258, A2ல் 52 சென்ட் மனைப்பிரிவு அனுமதி எண்.01/2015-16தேதி 24.7.2015ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகரமைப்பு துணை இயக்குநர்  செங்கல்பட்டு மண்டலம் கடிதம் ந.க.எண்.432/2013/செம3 நாள் 24.4.2015ல் மனைப்பிரிவு ஒப்புதலுக்கான தொழில் நுட்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள், குடி நீர், தெரு விளக்கு மற்றும் வடிகால் வசதி முழுமையாக அபிவிருத்தி செய்து உள்ளாட்சியில் ஒப்படைக்கப்படவில்லை. மறைமலைநகராட்சி நிர்வாகமும் அபிவிருத்தி கட்டணம் மதிப்பீடு தயாரித்து, ராமசுப்ரமணியத்திடம் வசூல் செய்யவில்லை.
  2. 2016-17ம் ஆண்டில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கட்டிட அனுமதியில் தெரிவிக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும், கூடுதலான பரப்பிற்கு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.புவனேஸ்வரி, எம்.சிவபிரகாசம், எம்.பாலசுப்ரமணியன், எஸ்.சிவகாமி உள்ளிட்ட 31 சட்டத்துக்கு புறம்பான கட்டிடங்களால் நகராட்சி இழப்பு சுமார் ரூ10 இலட்சம்…ஆர்.புவனேஸ்வரி, எம்.சிவபிரகாசம், எம்.பாலசுப்ரமணியன், எஸ்.சிவகாமி உள்ளிட்ட 31 சட்டத்துக்கு புறம்பான கட்டிடங்களால் நகராட்சி இழப்பு சுமார் ரூ10 இலட்சம்…

  • 2016-17ம் ஆண்டில் மேகநாதன்(கட்டிட அனுமதி எண்.46/1.2.2016), கே.ராஜேந்திரன்(கட்டிட அனுமதி எண்.89/29.2.2016), ஸ்ரீபாரத் கேஸ்(கட்டிட அனுமதி எண்.128/21.7.2016), திருமதி தமிழரசி(கட்டிட எண்.50/8.2.2016), எஸ்.ஏ.ரவி(கட்டிட அனுமதி எண்.130/21.3.2016) ஆகிய வணிக வளாகம், அலுவலகம், தொழிற்சாலைகள் கட்டிடங்களுக்கு அடிப்படை மற்றும் உள் கட்டமைப்புக் கட்டணம் வசூலிக்காத காரணத்தால் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு.
  • 2016-17, 2017-18ல் 50க்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி இல்லை, அபிவிருத்தி கட்டணம் வசூலிக்கப்படவில்லை, காலி மனை வரி வசூலிக்கப்படவில்லை, கோப்புகளில் பத்திரம் நகல், பட்டா இல்லை. ஆனால் சொத்து வரி மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சொத்து வரி எப்படி விதிக்க முடியும்..

இப்படிதான் கடந்த நான்கு ஆண்டுகளில் நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், காலி மனை வரி மற்றும் அபிவிருத்தி கட்டணம் வசூலிக்காமல் நகரமைப்பு பிரிவில் இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்கியதால், நகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  மறைமலை நகராட்சியின் நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக 283 அப்ருவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகரமைப்பு பிரிவு ஊழல்  தொடர்பான ஆதாரங்களுடன் ஊழல் புத்தகம் குடியரசு தினம் 26.1.2020ல் வெளியிடப்படும்..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த                          SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *