Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…

திருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…

திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு பிரிவில் கடந்த சில ஆண்டுகளாக சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. காலி மனை வரன்முறையில் முறைகேடு, காலி மனைக்கு வரி வசூல் செய்யாமல் இலட்சக்கணக்கில்  இலஞ்சம் வாங்கிக்கொண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களை நகரமைப்பு அதிகாரிகள் காப்பாற்றுவதால் நகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  1. ஸ்ரீவாரி அவென்யூ இரகுராமன் மனை வரன் முறை திட்டம் 2017ன் படி 587/2019 கோலடி கிராமத்தில் காலி மனை எண்.31க்கு மட்டும் வரன் முறை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவாரி அவென்யூ பத்திரவு பதிவு எண்.1016/2012ன்படி 102 சென்ட் அதாவது 44472 சதுர அடிகள் நிலம் 11.5.2012ல் செட்டிமென்ட் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆனால் காலி மனை எண்.31க்கு மட்டும் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. வரன்முறை கோப்பில் ஸ்ரீவாரி அவென்யூ வரைபடமே இல்லை. அரையாண்டுக்கு காலி மனை வரி ரூ7338 என கணக்கீட்டால் 2018-19ம் ஆண்டுக்கு மட்டும் நகராட்சிக்கு இழப்பு ரூ95,394/-

  • 2018-19ம் ஆண்டின் உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் அனுமதியற்ற வரன் முறை திட்டத்தின் கீழ் வரன் முறை செய்யப்பட்ட 519 காலி மனைகளுக்கு காலியிட வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் நகராட்சிக்கு இழப்பு ரூ16,09,467(ரூ16.09இலட்சம்).
  • கோலடி கிராமம் பட்டாபி நகரில் ஆர்.வினோதாவின் 28 காலிமனைகளில்  காலி மனை எண்.50,51க்கு மட்டும் வரன்முறை திட்டத்தில் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.

பட்டாபி நகர் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவில் வரன்முறைக் கோப்பில் பத்திர பதிவு எண்.2979/2017ன் படி 99970 சதுர அடி கொண்ட 94 மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நூலக வரியுடன் காலியிட மனை வரி அரையாண்டுக்கு கணக்கீட்டால் ரூ16,496/- 13 அரையாண்டுகளுக்கு நகராட்சிக்கு இழப்பு ரூ2,14,448/-

  • கட்டிட அப்ருவல் வழங்கப்படும் போது உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை.

கட்டிட அனுமதி எண்.15/2019/12.2.2019என்.மோகன் நகராட்சிக்கு இழப்பு ரூ75,375 மற்றும்  கட்டிட உரிமம் எண். 133/18/26.6.2018 இளையராஜா- நகராட்சிக்கு இழப்பு ரூ78,375/-

  இங்கு சில உதாரணங்கள் மட்டுமே கூறியுள்ளோம். கடந்த 2017-18, 2018-19,2019-20 (டிசம்பர் 2019 வரை) 500க்கு மேற்பட்ட அப்ருவல்களில் ஊழல் நடந்துள்ளது.

 திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு பிரிவில் நடந்துள்ள பல கோடி ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக தனி புத்தகம் 26.1.2020 அன்று குடியரசு தினம் அன்று வெளியிடப்படும்..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த                          SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *