Breaking News
Home / பிற செய்திகள் / போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் புரோக்கர் ரவி.
    போக்குவரத்து துறையிலும், அரசு உயர் அதிகாரிகள் மத்தியிலும் , எங்கு திரும்பினாலும் ‘ரவி’
ரவி, ரவி, என்ற பெயரே உச்சம் தொட்ட படி உள்ளது..   

 அரசு துறைகளில் வெளியில் இருந்து வாங்கப்படுகின்ற தொழில் நுட்ப சாதனங்களை சப்ளை செய்கிற பெரிய பெரிய, கம்பெனிகளில் இருந்து “சமான்களை ” சப்ளை செய்கின்ற புரோக்கர் ரவி.  உயர் அதிகாரிகளுக்கு, கமிஷன் பெற்றுக் கொடுக்கும் தரகராக இருந்து நட்பு வட்டாரத்தை பெருக்கி கொண்டுள்ளார் ரவி.
   போக்குவரத்து துறையில் “பான்டன்” கார்டு மூலமாக உள்ளே நுழைந்து அதிகாரிகள் முதல் ஆணையர் வரை தனது கைக்குள் கொண்டு வந்துள்ளார் ரவி.
   ஏற்கனவே, பிரிண்டர் மற்றும் கணினிக்குரிய ஸ்பேர்கள் சப்ளை செய்த வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நம்பிக்கைக்கு பாத்திரமானதால், ரவி சொல்வதற்கு பூம்..பூம் என்று தலையாட்டுகிறார் அமைச்சர்.

     தற்போது  போக்குவரத்தில். பயன்படுத்தி வரும் வேக கட்டுப்பாடு கருவிகள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய கருவியான “டெடி” கருவியை தான் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற கருவிகள் பயன்படுத்தும் எந்த வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்க கூடாது என ஆணையர்  மூலம் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து கோடிகளை அள்ளி வருகிறார் ரவி.
  ஏற்கனவே  பெரும்பாலான வாகனங்களில்  MERCYDA என்ற வேக கட்டுபாட்டு கருவி மற்றும், வேறு சில மாற்று கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
   குறிப்பாக, அனைத்து அரசு பேருந்துகளிலும் MERCYDA கருவிகள் தான் பொருத்தப்பட்டுள்ளது.. இப்படி வாகனங்களில் பொருத்தப்படுகிற, MERCYDA  கருவிகள்  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ARAI மற்றும் ICAT என்ற நிறுவனத்தின் முலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்க, தமிழகத்தில் மட்டும் போக்குவரத்து ஆணையரகத்தால், டெடி-யை தவிர வேறு எந்த வேக கட்டுபாட்டு கருவிக்கும் அனுமதி மறுக்கப்படுவதால், தற்போது டெடி – என்ற கருவியினை போடச்சொல்லி தமிழகமெங்கும் உள்ள ஆர்.டி.ஒ அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர்.


   தற்போது தானே புதிதாக மாற்றினோம். அதற்குள் இதை மாற்றி வாருங்கள் என்றால் ஒவ்வொரு தடவையும், ரூ7000, ரூ10,000 என எங்களால் செலவழிக்க முயுமா? என கோபம் கொப்பளிக்க அதிகாரிகளிடம் மன்றாடி வருகின்றனர் வாகன  உரிமையாளர்கள். தற்போது “டெடி ” வேக கட்டுபாடு கருவியை தவிர வேற எந்தவொரு வேக கட்டுபாட்டு கருவிக்கும் அதன் செயல்திறன் குறைவு .அதனால் விபத்துக்கள் அதிகமாகும் எனவே மாற்றி வாருங்கள் உங்கள் வாகனத்திற்கு FC தருகிறோம் என்கின்றனர் ஆர்.டி.ஒ அதிகாரிகள்.
   அப்படியானால்,  MERCYDA வேக கட்டுபாட்டு கருவி பொருத்தி வரும் அரசு பேருந்துகள்  விபத்துக்குள்ளாகலாமா? ஏற்கனவே அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்ட இந்த MERCYDA கருவியினை மட்டும் இன்னமும் கழட்டாமல் இருப்பது ஏன்?
 இப்படியொரு  போக்குவரத்துத்துறை ஆணையரின் மோசமான செயல்பாடுகளால், தமிழகம் எங்கும் ஆர்.டி.ஒ  அலுவலகங்களில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ்  கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஆங்காங்கே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்திற்கு தகுதிச் சான்றிதழ் (FC) கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
   இதன் பின்னனி என்ன என புலனாய்வு செய்த போது  “டெடி”(TEDI) வேக கட்டுப்பாட்டு கருவி போக்குவரத்து ஆணையான ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் பினாமி நிறுவனம் என்றும், அவரது பினாமி தான் ரவி என்றும் போக்குவரத்துத்துறையில் நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

  இதில் என்னெவொரு வேடிக்கை என்றால், அரசு பேருந்துகளுக்கு எல்லாம் அமைச்சரின் நேரடி பார்வையில் MERCYDA – நிறுவனத்தின் வேக கட்டுபாடு கருவிக்கு அனுமதி வழங்கியிருப்பதாலும், அதற்குரிய கமிசன் தொகைகள் எல்லாம் அமைச்சருக்கு போவதால் அதனை மாற்றியமைக்க முடியவில்லை.  அதான் அரசு பேருந்து FC க்கு மட்டும் நிபந்தனைகளில் தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் மொத்த வாகனங்களுக்கும் ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் பினாமி நிறுவனமான  TEDI நிறுவனத்தின்  வேக கட்டுப்பாடு கருவிகளை பொருத்து கட்டாயப்படுத்தபடுவதால், சிபிஐ விசாரணையில்  ஜவஹர் ஐ.ஏ.எஸ் சிக்க வாய்ப்பு உள்ளது.                              

Comments

comments

About mani bharathi

Check Also

திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த                          SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *