Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த                          SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி விதிமுறைகளை மீறி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.  SUN VIEW ENTERPRISES நிறுவனம் நகராட்சி அதிகாரிகளை விலைக்கு வாங்கி, போலி பில்கள் மூலம் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக  பணம் பெற்று வருகிறது.

 திருவேற்காடு நகராட்சியில் 2018-9ம் ஆண்டில் 21 வார்டுகளில் உள்ள தெரு விளக்குகளை பராமரிக்கும் பணி SUN VIEW ENTERPRISES நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ10.48 இலட்சத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 2018-19ம் ஆண்டில் பராமரிப்பு செய்ததாக மாதந்தோறும் அளிக்கப்பட்ட நகராட்சி பொறியாளரால் சான்றளிக்கபப்ட்ட பராமரிப்பு விவரப் பட்டியலின் படி 2X36 W CFL  எண்ணிக்கை 58 மற்றும் 70W SV lamp எண்ணிக்கை 60 ஆகிய தெருவிளக்குகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.

பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாத தெருவிளக்குகளுக்கு, ரூ1,75,536/- பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

 நகராட்சி பொறியாளரே 2X36 W CFL  எண்ணிக்கை 58 மற்றும் 70W SV lamp எண்ணிக்கை 60 ஆகிய விளக்குகளுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை என்று கோப்புகளில் எழுதி இருக்கும் போது, பணம் பட்டுவாடா எப்படி செய்யப்பட்டது?

  SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டிய பிறகும், 2019-20 ஆண்டுக்கு SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 வாக்களித்த அப்பாவி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் கூட மனிதாபிமானம் இல்லாமல் இலஞ்ச பணத்திற்கு விலை போகும் நகராட்சி அதிகாரிகள் செயல்பாடுகள் வேடிக்கையாக இருக்கிறது.

 SUN VIEW ENTERPRISES நிறுவனத்தின் ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *