Breaking News
Home / பிற செய்திகள் / செம்பாக்கம் நகராட்சி – SIVET கல்லூரியுடன் பேரமா- பயணியர் நிழற்குடை எங்கே?..

செம்பாக்கம் நகராட்சி – SIVET கல்லூரியுடன் பேரமா- பயணியர் நிழற்குடை எங்கே?..

செம்பாக்கம் நகராட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையில் ஊழல், நிர்வாக சீர்கேடு, சட்டத்துக்கு புறம்பாக நகரமைப்பு பிரிவில் அப்ருவல் என பக்கம், பக்கமாக உள்ளது.

 செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட கெளரிவாக்கத்தில் SIVET  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரி அரசு உதவி பெற்று வரும் கல்லூரியாக இருந்தாலும், சில பாடப்பிரிவுகளுக்கு சுய நிதி படிப்புகளை நடத்தி வருகிறது.

 சுய நிதி படிப்புகளை நடத்தி வரும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 8391)(சி)ன் படி குடியிருப்புகளுக்கு விதிக்கப்படும் சொத்து வரி விகிதத்தில் 1.5மடங்கு சொத்து வரி விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஆனால் 2017-18ம் ஆண்டிலிருந்து SIVET கல்லூரிக்கு சொத்து வரி விதிக்கப்படவில்லை. ஆனால் நகர மன்றத்தில் தீர்மானம் எண்.191 நாள் 28.3.2018ல் SIVET  கல்லூரிக்கு சொத்து வரி விதிக்க தீர்மானம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் நகர் மன்ற தீர்மானத்தின் படி SIVET சொத்து வரி விதிக்கப்படவும் இல்லை. 2018-19 உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் சொத்து வரி விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தும், இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. SIVET கல்லூரியுடன் செம்பாக்கம் நகராட்சி அதிகாரிகள் நெருக்கமாக இருப்பதாலும், இலவச சீட் கொடுப்பதாலும், சொத்து வரி விதிக்கவில்லை என்ற முணு முணுப்பு நகராட்சி நிர்வாக ஆணையரகம் வரை கேட்கிறது..

  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் அங்கன்வாடி கட்டிடம்,  நான்கு பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு ரூ24.70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 நான்கு பயணியர் நிழற்குடையில் இரண்டு மட்டும் பணி முடிந்துவிட்டதாக எம்.புத்தகத்தில் உள்ளது.

 ஆனால் மீதி இரண்டு பயணியர் நிழற்குடை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ8.46 இலட்சம் எங்கே? செலவு செய்யப்பட்டு இருந்தால் நிழற்குடை எங்கே?

 இரண்டு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது போல், போலி எம்.புத்தகம் தயாரித்து, ரூ8.46 இலட்சம் ஊழல் நடந்துள்ளதா?

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *