Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி- நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்கள் – கோடிக்கணக்கில் இலஞ்சம்…

ஆவடி மாநகராட்சி- நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்கள் – கோடிக்கணக்கில் இலஞ்சம்…

ஆவடி நகராட்சி/மாநகராட்சியில் 2016-17ம் ஆண்டில் நகரமைப்பு பிரிவில் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் மற்றும்  ஆணையர்கள் கூட்டணி சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அப்ருவல்கள் கொடுத்து மெகா ஊழல் சாதனையை அரங்கேற்றியுள்ளார்கள்..

 நகரமைப்பு ஊழலில் சிக்கிய அதிகாரிகள், இலஞ்ச பணத்தால் தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் மக்கள்செய்திமையம் ஊழல் அதிகாரிகளை தப்பிக்க விடாது.

  1. ஆவடி காந்தி நகர் மேற்கு விளஞ்சிவாக்கம் கிராமம் சர்வே எண்.167/2ல் 30 செண்ட் நிலத்தை 9மனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அப்ருவல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் ஆர்.டி.ஐ/13201/05 நாள் 29.6.2005ன்படி  8 மனைப் பிரிவுகளாக மட்டுமே பிரிக்க முடியும். மேலும் ரோடு 16 அடி சாலையாக அமைக்கப்பட வேண்டும். பிரிக்கப்படும் மனையின் அளவு 1000 சதுர மீட்டருக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 1215 சமீட்டரை ஐ மனைப்பிரிவுகளாக பிரிக்க முடியாது.

         ஆவடி நகராட்சி நிர்வாகம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்துக்கு புறம்பாக 9 மனைகளாக பிரித்து, அப்ருவல் அளிக்கப்பட்டுள்ளது.

  • ஆர்.வேலுசாமி கட்டிட அனுமதி எண்.146/எப்2/16 நாள் 28.4.2016 வணிக கட்டிடத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தரைதளம் 169 சமீ, முதல் தளம் 242 சமீ, இரண்டாம் தளம் 74 சமீ மொத்தம் 485 சதுர மீட்டருக்கு ஆவடி நகராட்சி நகரமைப்பு பிரிவு அப்ருவல் கொடுத்துள்ளது.

  வணிக கட்டிடத்திற்கு 300 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மட்டுமே சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் விதிகளின் படி ஆவடி நகராட்சி ஆணையர் அனுமதி அளிக்க முடியும்.

  சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி 485 சமீக்கு ஆவடி நகராட்சி நிர்வாகம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ருவல் வழங்கியுள்ளது.

  இதைவிட வேடிக்கை என்னவென்றால் வேலுசாமியின் வணிக கட்டிடம் அமைந்துள்ள சர்வே எண்.157/34/4பி வணிக மண்டல பிரிவில் அமைய பெறவில்லை. வணிக பிரிவில் வகைப்படுத்தப்படாத இடத்தில் , வணிக பயன்பாட்டிற்கு இலஞ்சம் வாங்கி கொண்டு ஆவடி நகராட்சி ஆணையர், நகரமைப்பு அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல் அளித்துள்ளார்கள்..

  2016-17ம் ஆண்டில் மட்டும் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி 100க்கு மேற்பட்ட கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வீட்டுமனைகளுக்கு , ஆவடி நகராட்சி நிர்வாகம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கொடுத்துள்ளது.

 சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை கொடுக்கப்பட்ட அனைத்து அப்ருவல்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இலஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ருவல் கொடுத்த ஆவடி நகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்  சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குரகம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளரிடம்  மக்கள்செய்திமையம் புகார் கொடுத்துள்ளது.

 புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *