Breaking News
Home / பிற செய்திகள் / கீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..

கீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் IUDM திட்டத்தில்   ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  பிப்ரவரி 2012ல்  குடி நீர் திட்டப்பணிகள் டெண்டர் கோரப்பட்டது. 2012 மே மாதம் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. ஆனால் டெண்டர் பணிகள் 2014 ஜனவரி மாதம் முடிந்தது.

  ஒப்பந்தகாரர் தரம் குறைவான பைப்களை பயன்படுத்திவிட்டு, தரம் அதிகமான பைப்களை பயன்படுத்தியதாக எம்.புத்தகத்தில் போலியாக பதிவு செய்து, முறைகேடாக ரூ46.37 இலட்சம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.

 Ductile Iron class K9 socket/spigot pipes பயன்படுத்தாமல்   Ductile Iron class K7 flanges pipesகளை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 தரம் குறைவான பைப்களை பயன்படுத்திவிட்டு, தரம் அதிகமான பைப்களை பயன்படுத்திய எம்.புத்தகத்தில் போலியாக பதிவு செய்து, ரூ46.37 இலட்சம் முறைகேடாக பணம் ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 இதை மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆய்வில் உறுதி செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ்க்கு 27.6.2016ல் மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினார்கள்.

 ஆனால் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், மத்திய தணிக்கைத்துறையின் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மத்திய தணிக்கைத்துறை அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

  பைப் ஊழலில் சிக்கியுள்ள கீழக்கரை நகராட்சியில் ஆணையராக இருந்த முகமது மொகைதீன், அயூப்கான், சந்திரசேகரன், முகமதுசிராஜ், முருகேசன், மருது உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய தணிக்கைத்துறை  பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.

   மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதிய பிறகும் ரூ46.37 இலட்சம் பைப் ஊழலில் நடவடிக்கை எடுக்காத, பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சங்கத்தலைவராகி விட்டார்.

      மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்தது. ஆனால் அந்த புகார் தமிழக அரசில் முடங்கி போய் கிடக்கிறது.

 அதனால் சிபிஐக்கு புகார் அனுப்பி உள்ளது.. தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அனுப்பினாலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குரகம் நடவடிக்கை எடுப்பதில்லை..

       சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *