Breaking News
Home / பிற செய்திகள் / பூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…

பூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…

பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக தாமரைச்செல்வன் பணியாற்றிய காலத்தில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக  கிராம நத்தம் இடத்தில் வணிக வளாகம் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார். மேலும் ஒ.எஸ்.ஆர் கட்டணம், அடிப்படை வசதிகள் கட்டணத்தில் மெகா ஊழல் அரங்கேறியுள்ளது.

1.பூந்தமல்லி டிரங்க்ரோடு சர்வே எண்.115/22,115/82,1345/16,17ல் கிராம நத்தம் 5478 சதுர அடி வணிக வளாகம் கட்ட 11.7.2016ல்(42/2016)ல் அப்ரூவல் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நத்தத்தில் வீடுகள் கட்டலாம், வணிக வளாகம் கட்ட முடியாது. ஆர்.டி/6427/2015 டடெட் 11.6.2015 &13/2015 தேதி 29.5.2015) அரசாணையின் மற்றும் சுற்றிகையின் படி கிராம நத்தம் இடத்திற்கு வணிக நோக்கத்திற்கான கட்டிட அப்ருவல் கொடுக்க முடியாது.

 ஆனால் பூந்தமல்லி நகராட்சியில் அனுமதி அளிக்கப்படுள்ளது.

2. டெக்சன் இன்ஜினியரிங்கஸ் பிரைவேட் லிமிட் கட்டிட  உரிமை எண்.115/2017. கட்டிட பரப்பு 13377சதுர அடி.  அடிப்படைகள் வசதிகள் கட்டணம் ஒரு சதுர அடிக்கு ரூ375 வசூலிக்க வேண்டும். குறைவாக வசூலித்த காரணத்தால் நகராட்சிக்கு இழப்பு ரூ1.86 இலட்சம்

  மேலும் காலி மனை வரி விதிப்பு படி டெக்சன் கம்பெனிக்கு ஒரு சதுர அடிக்கு 40பைசா வசூலிக்க வேண்டும். ஆனால் ஒரு பைசா வசூலிக்கவில்லை. அதனால் 22208 சதுர அடிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ40பைசா என கணக்கீட்டால் ரூ1.27இழப்பு.

3. பி.மாதவன், தொழிற்சாலை கட்டிட உரிமை எண்.72/2017. கட்டிட பரப்பு 17039 சதுர அடி சென்னை பெரு நகர வளர்ச்சிக குழுமத்தின் கடித எண். ஆர்.டி/11850/2014 நாள் 18.12.2014ன் 300 சதுர மீட்டருக்கு மேற்பட்ட அனைத்து வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு அடிப்படை வசதிகள் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ375 வசூலிக்க வேண்டும். அடிப்படை கட்டணம் குறைவாக வசூல் செய்த காரணத்தால் நகராட்சிக்கு இழப்பு ரூ3.33இலட்சம்.

4. திருமதி ரேவதி 2400 சதுர அடி வீட்டுமனையில்  4930 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பின் படி ஒ.எஸ்.ஆர் கட்டணம் ரூ3,21,600 வசூலிக்க வேண்டும். ஆனால் ஒரு இலட்சம் குறைவாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

 இப்படி பல அப்ருவல்களில்  நகரமைப்பு பிரிவில் விதிமுறைகளை மீறப்பட்டதால், பல லட்சம் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

 உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட, நகராட்சி இழப்பு ஏற்பட்டதை, இழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்த நகராட்சி ஆணையர்,  நகரமைப்பு ஆய்வாளரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.. ஆனால் வசூலிக்கவும் இல்லை. கட்டிட உரிமையாளர்களிடமிருந்தும் வசூலித்து, நகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படவும் இல்லை.

  பூந்தமல்லி நகராட்சியில் ஊழல் செய்த அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் பின்னணியில் தப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

     ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுக்கிறதா..என்று பார்ப்போம்..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *