Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி- கூவம் ஆறு கம்பி வேலி ஊழல்- சிக்கிய எஸ்.பி பில்டர்ஸ்…

திருவேற்காடு நகராட்சி- கூவம் ஆறு கம்பி வேலி ஊழல்- சிக்கிய எஸ்.பி பில்டர்ஸ்…

திருவேற்காடு நகராட்சி நிர்வாகம்  கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழலில் மூழ்கிவிட்டது. குப்பை ஊழல், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக வணிகவளாகம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி, கோணி ஊழல் என்று எந்த பக்கம் பார்த்தாலும் ஊழலில் சிக்கியுள்ளது.

 வேலப்பன் சாவடி முதல் வானகரம் வரையுள்ள கூவம் ஆற்றில் இருபுறமும் கம்பி வேலிகள், பூங்கா மற்றும் நடைபாதைப் பணிகள் ரூ36.50கோடி மதிப்பில் அமைக்கும் பணி எஸ்.பி பில்டர்ஸ் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தில் இரு coloumn உள்ள இடைவெளி(ஸ்பான்) 4.50 மீட்டர் ஆக உள்ள நிலையில் கிரேட் பீம் அமைக்கப்பட்ட நீளத்திற்கு coloumnகளைவிட கூடுதலாக coloumn அமைக்கப்பட்டது. Grade beam அமைக்கப்பட்ட நீளத்தைவிடக் கூடுதலான நீளத்திற்கு மண் வேலை செய்து, அடித்தளக் கான்கிரிட் அமைத்தது.

   Coloumn முதன்மை கம்பி பயன்படுத்தப்பட்ட உயரத்தை விட கூடுதலான உயரத்திற்கு   Coloumn மற்றும் கிரீல்லுக்கான செங்கற் சுவர் கட்டுமான அமைக்கப்பட்டுள்ளது. Pile cap அளவுகளில்  pile கழிவு செய்யப்படவில்லை.

 உதாரணமாக 4.80 மீட்டர் இடைவெளியில் 157 coloumnகள் மட்டுமே எழுப்ப வேண்டிய நிலையில் 218  Pile cap அமைக்கப்படதாக எம்.புத்தகத்தில் அளவுகல் பதிந்து முறைகேடு நடந்துள்ளது. அதே போல் கிரேடு பீம் மீது 4.80 மீட்டர் இடைவெளியில் 157 coloumnகள் மட்டுமே அமைக்கக் கூடிய நிலையில் 186 coloumnகள் அமைக்கப்பட்டதாக எம்.புத்தகத்தில் பதிவு செய்து, முறைகேடு நடந்துள்ளது.

  இப்படி எம்.புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல பதிவுகளுக்கு, கட்டுமான பணிகளுக்கு தொடர்பே இல்லை.

 ஒப்பந்ததாரர் எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனம் ஆதாயம் பெறும் வண்ணம் திருவேற்காடு நகராட்சியின் நிர்வாகத்தில் உள்ள ஆணையர் உள்ளிட்ட செயல்பட்டுள்ளார்கள். திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனத்திடம் மதிப்பீட்டு தொகையில் 10 இலஞ்சம்/கமிசன் வாங்கியதால், எஸ்.பி பில்டர்ஸ் ஆதரவாக எம்.புத்தகத்தில் ,கட்டுமான பணிக்கு மாறாக தவறான புள்ளி விவரங்களை பதிந்து, பணம் பட்டுவாடா செய்த முறைகேட்டால் நகராட்சிக்கு உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையின் படி ரூ16.59 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 ஆனால் உண்மையில் நகராட்சிக்கு ரூ1கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துள்ளது.

     மக்கள்செய்திமையம் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *