Breaking News
Home / பிற செய்திகள் / பம்மல் நகராட்சி- பேட்டரி குப்பை வாகன ஊழல்.. முடங்கி போன ஏழு குப்பை வாகனம்..

பம்மல் நகராட்சி- பேட்டரி குப்பை வாகன ஊழல்.. முடங்கி போன ஏழு குப்பை வாகனம்..

பம்மல் நகராட்சி பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனம், என்.காண் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ததில் மெகா முறைகேடு நடந்துள்ளது.

  பம்மல் நகராட்சியில் பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனம் 15 கொள்முதல் டெண்டரில் என்.காண் இன்ஜினியரிங், பிரிமியம் இண்டஸ்டரிஸ் பிரைவேட் இரண்டு நிறுவனங்களும் கலந்துக்கொண்டது.

 எல்-1 வாக என்.காண் இன்ஜினியரிங் நிறுவனம் இருந்தாலும், ஒப்புக்கொண்ட விலை விகிதத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, விலைகுறைப்பு செய்திருக்க வேண்டும். விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல், ஒப்பந்ததாரருக்கு ஆதாயம் தரும் நோக்கில் பம்மல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டுள்ளது..

   என்.காண் இன்ஜினியரிங் நிறுவனம் பேட்டரி குப்பை வாகனம் கொள்முதல் நடந்த ஊழல் தொடர்பான சில கேள்விகள்..

  1. பேட்டரியால இயங்கும் 15 வாகனத்திற்கு நிதி ஒதுக்கீடு 27இலட்சம்(1 வாகனத்திற்கு ரூ1.80இலட்சம்). ஒதுக்கப்பட்ட நிதியையே வாகனத்தின் மதிப்பீட்டு தொகையாக குறிப்பிட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது டெண்டர் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது. சந்தை விலையை ஒப்புநோக்கி அதனடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
  2. ஒதுக்கப்பட்ட நிதிக்கு நிகராக வாகனத்தின் விலையை நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஊழல் நடந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.
  3. கொள்முதல் செய்யபப்ட்ட பேட்டரி வாகன கொள்முதல் ஒப்பந்தத்தில் ஒரு வருடத்திற்கு பராமரிப்பு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வாகனம் பழுதடைந்தாலோ, உதிரிபாகங்கள் பழுதடைந்தலோ ஒப்பந்தகாரர் தன் சொந்த செலவில் முழுசெலவில் பழுது நீக்கம் மேற்க்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஒப்பந்த விதிகளுக்கு மாறாக அக்டோபர் 2018 முதல் பேட்டரி வாகனங்கள் பழுதடைந்த நிலையில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுள்ளது. பழுதடைந்துள்ள 7 பேட்டரி வாகனங்களை ஒப்பந்தத்தின் படி, என்.காண் இன்ஜினியரிங் நிறுவனம் பழுதை நீக்க முன்வரவில்லை .நகராட்சி  நிர்வாகமும் என்.காண் நிறுவனத்திடம் பழுது சரி செய்ய சொல்லி, நோட்டீஸ் அனுப்பி, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

 7 பேட்டரி வாகனங்கள் முடங்கி போனதால், நகராட்சி ரூ12.60 இலட்சம் இழப்பு. தூய்மை இந்தியா இயக்கத்தின் படி தினமும் குப்பைகளை அகற்றும் பணி முடங்கி போய்விட்டது.

  பம்மல் நகராட்சி பேட்டரி குப்பை வாகனம் கொள்முதல் ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநரகத்தில் அளித்த புகாரின் பேரில் முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *