Breaking News
Home / பிற செய்திகள் / இந்து சமய அறநிலையத்துறை – இணை ஆணையர் காவேரி சஸ்பெண்ட்?- ரூ36.19இலட்சம் எங்கே?..

இந்து சமய அறநிலையத்துறை – இணை ஆணையர் காவேரி சஸ்பெண்ட்?- ரூ36.19இலட்சம் எங்கே?..

இந்து சமய அறநிலையத்துறையின் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையராக இருக்கும் காவேரி மீது 17பி குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

 இணை ஆணையர் காவேரி, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் துணை ஆணையராக கூடுதல் பொறுப்பில் இருந்த போது, ரூ500, ரூ1000 நோட் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த வீர.சண்முகமணி ந.க.எண்.58589/2015/யு1 நள் 16.11.2016ன்படி பண மதிப்பிழப்பு காலத்தில் 26.12.2016க்குள் அனைத்து திருக்கோயிகளிலும் வாரம் ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு, ரூ1000/-, ரூ500/- நோட்டுகள் 31.12.16க்குள் வங்கியில் செலுத்த வேண்டும் என்று உத்திரவிட்டார்.

 ஆனால் துணை ஆணையர் காவேரி, 2016ம் ஆண்டு முழுவதும் உண்டியல் திறக்கப்படாமல், 3.1.2017ல் உண்டியல் திறந்த போது  ரூ1000நோட் 2764ம், 500 நோட் 1711ம் இருந்தது. இதன் மதிப்பு ரூ36,19,500/- இந்த பணத்தை வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பக்தர் காணிக்கையாக செலுத்திய ரூ36.19இலட்சம் முடங்கி போனது. தற்போது ரூ36.19இலட்சம் எங்கே இருக்கிறது.. குப்பைக் கூடைக்கு போனதா.. தீயிட்டு எரிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

 காவேரி 31.12.16க்குள் உண்டியல் திறந்து, வங்கியில் செலுத்தியிருந்தால், ரூ36.19இலட்சம் , இழப்பு ஏற்பட்டு இருக்காது. நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை காட்டுகிறது, தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   இதனால் துணை ஆணையர் காவேரி மீது, 17பி குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. ஆணையராக இருந்த வீர.சண்முகமணி சுற்றிக்கை ந.க.எண்.4342/2017/எல்1/நள் 2.2.17ல் 17பி குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடிந்து, இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை, பதவி உயர்வு கொடுக்க கூடாது, பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 ஆனால் துணை ஆணையர் காவேரி ரூ36.19 இலட்சம், இந்து சமய அறநிலையத்துறைக்கு இழப்பு ஏற்படுத்திய பிறகு, இணை ஆணையராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரூ36.19 இலட்சம் இழப்பு ஏற்படுத்திய போது என்ன பதவியில் இருந்தாரோ அதே பதவியில் காவேரி இன்னும் தொடருகிறார் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

 பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் போட்ட பணத்தை கூட காப்பாற்ற முடியாத இணை ஆணையர் காவேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், இணை ஆணையர் காவேரியை காப்பாற்றவதை பார்க்கும் போது, இந்து சமய அறநிலையத்துரை  நிர்வாகம் ஊழல், முறைகேட்டில் முடங்கி போய்விட்டது என்பது உறுதியாகிறது..

  இணை ஆணையர் காவேரி மீது போடப்பட்டுள்ள 17பி குற்றச்சாட்டு குறிப்பாணையின் விசாரணை அதிகாரியாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்,  இணை ஆணையர் காவேரியை தற்காலிக பணி நீக்கம் செய்துவிட்டு விசாரணை நடத்துவாரா?

  பக்தர்கள் வாயை கட்டி, வயிற்றை கட்டி, வரிசையில் க்யூ நின்று உண்டியலில் போட்ட ரூ36.19 இலட்சம் பணத்தை ஏமாற்றிய இணை ஆணையர் காவேரியின் சம்பளத்திலிருந்து  பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா?- குறிப்புக்கோப்பு அம்பலம்…

   கொரோனாவை கட்டுப்படுத்த 135 நாட்கள் கழித்து, ரேசன் கார்டுகளுக்கு இலவசமாக மாஸ்க் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மாஸ்க் கொள்முதலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *