Breaking News
Home / பிற செய்திகள் / பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESல்- எம்.சாண்ட் விலையேற்றம் எப்படி?- ஆற்று மணல் குவாரி என்னாச்சு..

பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESல்- எம்.சாண்ட் விலையேற்றம் எப்படி?- ஆற்று மணல் குவாரி என்னாச்சு..

தமிழகத்தில் ஆற்று மணலை விட எம்.சாண்ட்(M-sand –crushed Stone stand) விலை அதிகம் என பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESஐ சுட்டிக்காட்டி உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.

 பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESன் படி ஆற்று மணல், எம்.சாண்ட் விலை ஒரு பார்வை..

 ஆற்று மணல்..

 2013-14ல் – ஒரு கன மீட்டர் விலை  –ரூ110/-

 2015-16ல் ஒரு கன மீட்டர் விலை –ரூ176.40

 2017-18ல் ஒரு கன மீட்டர் விலை – ரூ168/-

 2018-19ல் ஒரு கன மீட்டர் விலை  -ரூ 168/-

2018-19ல் ஒரு கன மீட்டர் Plastering Sand –P.sand – ரூ883/-

2019-20ல் ஒரு கன மீட்டர் விலை ரூ447/-

2019-20ல் ஒரு கன மீட்டர் Plastering Sand –P.sand – ரூ1250/-

      Plastering Sand –P.sand என்றால் எனக்கு தெரியவில்லை..

எம்.சாண்ட்(M-sand –crushed Stone stand)..

2013-14ல் ஒரு கன மீட்டர் விலை – ரூ367/-

2015-16ல் ஒரு கன மீட்டர்  விலை – ரூ419/-

2017-18ல் ஒரு கன மீட்டர் விலை  -ரூ434.29/-

2018-19ல் ஒரு கன மீட்டர் விலை  -ரூ777/-

2019-20ல் ஒரு கன மீட்டர் விலை – ரூ1250/-

 பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் எம்.சாண்டை விட ஆற்று மணல் விலை குறைவாக இருந்து, எம்.சாண்டை பயன்படுத்தப்படுவது ஏன்?

 ஆற்று மணலை அரசு துறைகளில் பயன்படுத்தினால், திட்டங்களின் மதிப்பீடு குறையும். மேலும் பல திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தலாம்.

 பொதுப்பணித்துறையே ஆற்று மணலை எடுத்து நேரடியாக விற்பனை செய்து வரும் நிலையில் அரசு திட்டப்பணிகளுக்கு ஆற்று மணலை பயன்படுத்தாமல், அதிக விலையுள்ள எம்.சாண்டை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு அதிகாரிகள் தள்ளப்பட்ட பின்னணி என்ன?

  2018-19ல் ஆற்று மணல் விலை ஒரு கன மீட்டர் ரூ168/-தான்.. ஆனால் எம்.சாண்ட் ஒரு கன மீட்டர் விலை ரூ777/-

 2019-20ல் ஆற்று மணல் விலை ஒரு கன மீட்டர் விலை ரூ447/-தான். ஆனால் எம்.சாண்ட் ஒரு கன மீட்டர் விலை ரூ1250/-

 திட்டங்களுக்கு விலை குறைவான ஆற்று மணலை பயன்படுத்தாமல், எம்.சாண்டை பயன்படுத்துவதால், திட்டங்களின் மதிப்பீட்டு தொகை உயருகிறதே? எம்.சாண்ட் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரிகள் விலை போய்விட்டார்களா?

 அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பதில் சொல்லுவார்களா?

Comments

comments

About mani bharathi

Check Also

அம்பத்தூர்… உச்சி வெயிலில் வெளி மாநில தொழிலாளர்கள்- மனிதாபிமானமே இல்லையா?…

கொரோனா ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *