Breaking News
Home / பிற செய்திகள் / ‘ஜெ” -யால் டம்மியாக்கப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ்-க்கு- முதல்வர் அரவணைப்பா?

‘ஜெ” -யால் டம்மியாக்கப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ்-க்கு- முதல்வர் அரவணைப்பா?

முன்னாள் முதல்வர் “ஜெ” அவர்களால், டம்மியாக்கப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ் கருவூலம் மற்றும் கணக்கு துறையில் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார்..அப்போது ஜவஹார் ஐ.ஏ.எஸ்யின் ஆல் இன் ஆல் உதவியாளர் மகன், பள்ளியில் குடித்துவிட்டு ரகளை செய்ய, பள்ளி நிர்வாகம் அந்த பையனை பள்ளியிலிருந்து நீக்கியது. ஜவஹர் ஐ.ஏ.எஸ் பள்ளி நிர்வாகத்தை மிரட்ட, குடிகார பையனை பள்ளி நிர்வாகம் மீண்டும் சேர்த்துக்கொண்டது.
  “அம்மா” வழியில் எடப்பாடி அரசு என, அதிமுக தொண்டர்களில் இருந்து, அமைச்சர்கள் வரை, உரக்க சொல்லி வந்த நிலையில், மிக முக்கிய துறையான போக்குவரத்திற்கு “அம்மா”அவர்களால் ஒதுக்கப்பட்ட, இந்த ஜவஹர் ஐ.ஏ.எஸ எப்படி நியமிக்கப்பட்டார் என்று அதிமுகவினரே, கேள்வி எழுப்பும் நிலையில், காவல் துறையின் பைலட் வாகனத்தோடு, புடைசூழ  RTO அலுவலக ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும், வலம் வந்து கொண்டுள்ளார்.
  அதே நேரத்தில் தேர்தல் நேரம் என்பதால், ஜவஹர் ஐ.ஏ.எஸ் செல்லும் வாகனத்திற்குள் இருப்பது என்ன? உள்ளாட்சித் தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்ய, ஜவஹர் ஐ.ஏ.எஸ் வாகனம் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தடைகள் இருக்கும், நேரத்தில் காவல்துறையின் “பைலட் ” பந்தோபஸ்துகள் ஏன்? என எதிர்கட்சிகள் எழுப்பும்,கேள்விகள் எழுப்பு, முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஜவஹர் ஐ.ஏ.எஸ் RTO அலுவலக ஆய்வுக்காக செங்குன்றம்  அலுவலகத்திற்கு,சென்ற  போது, இவரது கார் கதவை திறக்க சென்ற, ஒரு பெண் ஆய்வாளரை, பெண் என்று பாராமல்,பலரது முன்னிலையில் சகட்டுமேனிக்கு திட்டி, பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி, அந்த ஆய்வாளரை மன ஊளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இதனை அறிந்த, மோட்டார் வாகன சங்க நிர்வாகிகள், அந்த பெண் ஆய்வாளருக்காக கொதித்தெழுந்து ஆணையரின்  இந்த செயலை புலம்பி வருகிறார்கள்.
   போக்குவரத்து துறையில் பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கும் நிலையில் எந்த புகார்களுக்கும் தண்டனைகள் இல்லை. அந்த கோப்புகள் அனைத்தும் முடங்கியிருக்கும் நிலைகள் ஒரு புறம், மற்றொரு நிலையில், நிலுவையில் நிற்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கான கோப்புகளுக்கு விடிவுகள் இல்லாமல் இருப்பது மறுபுறம்.
 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பல்வேறு கோரிக்கைகள்
தீர்க்கப்படதாது என இப்படி பல .. பல… பணிகள் நிலுவையில் நிற்கும் நிலையில், இதுவரை எவரும் செய்யாத படு பந்தாக்களோடு, போலீஸ் புடையுடன், அதிகாரிகளை அலறவிடுவது, ஆர்.டி.ஒ அதிகாரிகளை மிரளச் செய்வது எல்லாம், ஏன்? எதற்காக என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  மேலும், வேலை நாட்களான இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்ட நடத்த இருப்பால், இன்று நடக்க வேண்டிய பணிகளில் ஏற்படும் காலதாமதத்திற்கு, பொதுமக்கள் படும் வேதனைகள் சொல்வதற்கில்லை என்றாலும், அரசு தான் உடனே அதிரடி காண வேண்டும்.
அதே நேரத்தில் தற்போது ஜவஹார் ஐ.ஏ.எஸ்யின்அதிரடிகள் மீடியாக்கள் மூலம் பகிரப்பட்டு, விளம்பர படுத்தப்பட்டால் தான், அடுத்தடுத்த சில மாதங்களில்  மாதந்திர “கட்டிங்” கலெக்சன்களை, அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்பது நோக்கமாக இருக்குமோ என்று ஆர்.டி.ஒ அலுவலக அதிகாரிகள் வெளிப்படையாக பேசுகிறார்கள்.

ஜவஹர் ஐ.ஏ.எஸ்செல்லும் இடங்களுக்கு எல்லாம் PRESS – தரப்பில் இருந்து பெரும் கூட்டமே பேட்டிக்கு வர வேண்டும் என்ற கட்டளைகளும் போடப்படுகிறதாம்.இதில் ஆணையர் போடும் கணக்குகள் வேறாக இருந்தாலும், கருவூலம் கணக்கு துறையில் இவர் “கணக்கு” செய்த சங்கதிகளை பற்றி கேள்விகளை எழுப்ப சில ஊடகத்தினர்களும், அடுத்தடுத்த சந்திப்புகளில் கேள்விகளை எழுப்ப உள்ளனராம்.
  சங்கதிகள் அம்பலமாகும் முன்பு, தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா?- குறிப்புக்கோப்பு அம்பலம்…

   கொரோனாவை கட்டுப்படுத்த 135 நாட்கள் கழித்து, ரேசன் கார்டுகளுக்கு இலவசமாக மாஸ்க் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மாஸ்க் கொள்முதலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *