Breaking News
Home / பிற செய்திகள் / போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின்- பைலட் வாகன சர்ச்சை..

போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின்- பைலட் வாகன சர்ச்சை..

ஜவஹர் ஐ.ஏ.எஸ் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் ஆணையராக இருந்த போது, கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறையில் ஆணையராக பொறுப்பேற்ற நிலையில், பைலட் வாகன சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

        போக்குவரத்து துறையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் தமிழகமெங்கும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஆய்வுக்காக சென்று வருகிறார்.
   இவரது வாகனங்களுக்கு முன்னும், பின்னும். பாதுகாப்புக்கான பைலட் வாகனங்கள் செல்ல வேண்டும் என,தனது துறை அதிகாரிகளுக்கு உத்திர விட்டு உள்ளதால், அந்த பைலட் வாகனத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான, அனைத்து செலவுகளையும், இந்த துறை அதிகாரிகளே செய்து வருவதால், MVI – க்கள் கண்ணை கசக்கி வருகின்றனர்.


   ஆணையரின் வாகனம் விபத்துக்களில் சிக்கி விடாமல் இருக்கவும்,, தனது பொதுநல பாதுகாப்புக்கும், ஒரு, உத்தரவாதத்தை ஏற்படுத்திக்கொள்ளும், இந்த ஆணையரால், பொதுமக்களின் வாகன விபத்துக்கு, ஒரு வழியினை ஏற்படுத்தி வருவது தான், கொடுமையிலும், கொடுமையான ஒன்று, என கூறி வருகின்றனர்.
  அதாவது, ஆணையரின் பாதுகாப்புக்கு வரும், இது போன்ற  காவல்துறையினருக்கு, அன்றாட செலவுகளை செய்து வரும்,அந்தந்த பகுதி மோட்டார் வாகன அதிகாரிகள், தங்களது
பணிகளில் விதிகளை மீறி செய்வதும், அதாவது தகுதியில்லா வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் வழங்குவது, சாலை விதிகளை அறியாத நபர்களுக்கு ஒட்டுனர் உரிமங்கள் மற்றும் வில்லை(பேட்ஜ்)கள் வழங்குவது,அதில் பெறப்படும், லஞ்சத் தொகைகள் மூலம், இது போன்ற செலவுகளை செய்து கொள்வது என பயன்படுத்தும் நிலைகள் தான் உருவாகிறது. இதனால் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக விபத்துக்களில் அதிகம் சிக்க நேரிடுகிறது.
  எனவே, விபத்தை தடுக்க வேண்டிய ஒரு ஆணையரால் மட்டுமே, விபத்துக்கள் அதிகமாவதை, இந்த அரசு எப்படி தடுக்கப் போகிறது என்பதே புதிய ஆணையரால் எழும்பும் கேள்விகளாகும்.
  அதுமட்டுமல்ல, நீதியரசர்களுக்கு கூட பைலட் வாகனங்கள் முன்னே, பின்னே செல்லவில்லை.
  துறையின் அமைச்சர் கூட சைரனை கழட்டி விட்டுத்தான் செல்கிறார்.
 இந்த நிலையில், போக்குவரத்து ஆணையருக்கு ஏன் இந்த பந்தோபஸ்து?
 அதுவும், தேர்தல் தடை இருக்கும்,இந்த நேரத்தில், தற்போது ஆய்வுக்காக சென்று வரும் ஆணையர் ஜவஹர் IAS -ன் காரின் பின்னாலும், முன்னாலும், பைலட் கார் செல்ல, தேர்தல் கமிஷன் எப்படி அனுமதிக்கிறது. இதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையும் எப்படி துணை நின்றது என்ற கேள்விகளை எதிர்கட்சியினரும், மூத்த IAS அதிகாரிகளும் முணு,முணுக்கிறார்கள்.

  தமிழக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஜவஹர் IAS அதிகாரிக்கு பாடம் கற்பிக்கப் போவது யார்?

.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…நகராட்சி நிர்வாகம்… மும்மூர்த்திகளின் ஊழல் கூத்து… இருவர் ரப்பர் ஸ்டாம்பா?…

நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஊழலில் மூழ்கிவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் காணாமல் போய்விட்டது. நகராட்சிநிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *