Breaking News
Home / பிற செய்திகள் / ஊரக பகுதிகளில் டெண்டர்- தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- மாநில தேர்தல் ஆணையம் “PHONY”…

ஊரக பகுதிகளில் டெண்டர்- தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- மாநில தேர்தல் ஆணையம் “PHONY”…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவித்து, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது.

 ஆனால் மாநில முழுவதும் ஊரக பகுதிகளில் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டு, சாலை போடுவது உள்ளிட்ட பல பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களே நடத்தை விதிமுறைகளை மீறுகிறார்கள். மாநில தேர்தல் ஆணையரும், ஆணையமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.. இதான் நேர்மையான உள்ளாட்சித் தேர்தலா?

  உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் 3.1.2020 தேதி டெண்டர் திறக்கும் வகையில் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது.

  1. சாத்தன்குளம் ஊராட்சி ஒன்றியம் – சிஎப்சி நிதி சாலை மேம்பாடு –ரூ43.10 இலட்சம்
  2. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் –சிஎப்சி நிதி நான்கு சாலைகள் மேம்பாடு- ரூ38இலட்சம்
  3. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் சிஎப்சி நிதி இரண்டு  சாலைகள் மேம்பாடு- ரூ48இலட்சம்
  4. ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சிஎப்சி நிதி ஐந்து சாலைகள் மேம்பாடு –ரூ53.20இலட்சம்
  5. உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிஎப்சி நிதி ஐந்து சாலைகள் மேம்பாடு –ரூ49.80இலட்சம்
  6. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் 14வது நிதி கமிசன் நிதி மூன்று சாலைகள் மேம்பாடு – ரூ48.25 இலட்சம்.

ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிஎப்சி நிதி, 14வது நிதி கமிசன் நிதியிலிருந்து சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் போது, சாலைகள் மேம்பாட்டு பணிகளுக்கு  எப்படி டெண்டர் கோரமுடியும்… தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருந்தும், கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்(ஒய்வு), ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

   ஊரக பகுதிகளில் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் போது, சாலைகள் மேம்பாட்டு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு இருப்பதை, பார்க்கும் போது, ஊரக பகுதிகளில் எப்படி நேர்மையான தேர்தல் நடக்கும்?

                     மாநில தேர்தல் ஆணையம் “PHONY” யா?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *