Breaking News
Home / பிற செய்திகள் / 528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…

528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…

உள்ளாட்சித்துறை அமைச்சராக  இருந்த கே.பி.முனுசாமியிடம், அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடுவின் நெருங்கிய உறவினர்  சேகர் சிறப்பு உதவியாளராக அதிகாரமையத்தில் வலம் வந்தார். சேகரின் ஆசியால் உள்ளாட்சித்துறை அமைச்சரின் பேரூராட்சிகளின் உதவியாளராக ஒய்வு பெற்ற சுபாஷ் நியமிக்கப்பட்டார்.

 கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி அய்யா நியமிக்கப்பட்டார். கொஞ்ச நாள் சுபாஷ் அமைச்சர் அலுவலகம் பக்கம் தலைகாட்டினார். ஆனால்  உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒரங்கட்டிவிட்டார். கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் ஆர்.பார்த்தீபன், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக அதிகாரமையத்தில் வலம் வந்தார்.

 ஆர்.பார்த்தீபன், உள்ளாட்சித்துறை அமைச்சரால் ஒரங்கட்டப்பட்டார்.

  ஆர்.பார்த்தீபன் ஒரங்கட்டப்பட்டவுடன், சுபாஷ் 528 பேரூராட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக நியமிக்கப்பட்டு, அதிகாரமையத்தில் வலம் வந்தார்.

  சுபாஷ், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு தெரியாமல் ஊழல் ஆட்டத்தில் வலம் வந்தார். 5 சதவிகிதம் சுபாஷ் என்று அதிகாரிகள் சுபாஷ்யை அன்பாக அழைத்தார்கள்.

    பேரூராட்சிகளில் கொங்கு மாவட்டங்களில் பணியாற்றும் துவாகராநாத் சிங், கணேஷ்ராம், சேகரன் உள்ளிட்ட சில அதிகாரிகள் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் சுபாஷின் ஊழல் ஆட்டத்தை ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த புகாரின் பேரில்

 உள்ளாட்சித்துறை அமைச்சர் உடனடியாக சுபாஷ்யை பேரூராட்சிகளின் உதவியாளர் பணியிலிருந்து நீக்கினார். அமைச்சர் அலுவலகம், அமைச்சரின் வீடு பக்கமே தலைகாட்டக்கூடாது என்று உத்திரவிட்டுள்ளார். மேலும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், பேரூராட்சிகளின் அதிகாரிகள் முணுமுணுக்கிறார்கள்..

   528 பேரூராட்சிகளில் கடந்த இரண்டு வருடங்களில் நடத்திய ஊழல் திருவிளையாடலில் சம்பாதித்த பல லட்சம் பணத்தை காப்பாற்ற அங்கும், இங்கும் ஒடுகிறார் சுபாஷ்..

 சுபாஷின் வீடு உள்ள பம்மல் பக்கம் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்துவார்களா?

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *