Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…

தூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…

    தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஊழல், முறைகேடுகளால் சீரழிந்து போய்விட்டது. தூத்துக்குடி மாநகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்த மாறன், பணியில் சேர்ந்த நாள் மற்றும் மாறனின் பணி விவரங்கள்(Nature of duties) கூட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் தகவல் தர மறுத்துவிட்ட அளவிற்கு நிர்வாகம் மோசமாகிவிட்டது.

 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் டெங்கு கொசு பண்ணை செயல்படுகிறது. டெங்கு கொசு பண்ணையிலிருந்து டெங்கு கொசுவை இலவசமாக மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்ட வேண்டாமா?

 வீட்டுக்கு வீடு டெங்கு கொசு விழிப்புணர்வு பெயரில் நோட்டீஸ் கொடுக்கும் மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி இடங்களில், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ள அமைந்துள்ள இடத்தில் நீரில் மிதக்கிறது.. எந்த பக்கம் திரும்பினாலும் குப்பை குவியல். ஒவ்வொரு குப்பை குவியலிலும் டெங்கு கொசு பண்ணை செயல்படுகிறது..போட்டோவை பாருங்கள்.. மக்களுக்கு தரமான குடி நீர் கிடைக்குமா என்று வாக்களித்த மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

 குடி நீர் குழாய் பராமரிப்பு வாகனம் ரூ47 இலட்சத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வாங்கினார்கள். அந்த வாகனம் டம்மியாக நிற்கிறது. வாகனத்தில் இயந்திரம் எங்கே என்று தெரியவில்லை.

 தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் விருது கொடுத்து கெளரவிக்கலாம்..

Comments

comments

About mani bharathi

Check Also

போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..

போக்குவரத்துறை ஆணையர்  சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *