Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..

ஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..

ஆவடி மாநகராட்சி(ஆவடி நகராட்சி)யில் குப்பை ஊழல் தொடர்ந்து தெரு விளக்கு பராமரிப்பு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆவடி நகராட்சியில்(மாநகராட்சி) வார்டு எண்.7 முதல் 19 வரை, 21 முதல் 32 வரை மற்றும் 36,38,39,41, 47 ஆகிய 30 வார்டுகலில் 1.12.2016 முதல் 30.11.2017 வரை ஆண்டுக்கு ரூ1,58,40,669/-க்கு(ரூ1.58கோடி) வி.கே.காண்ட்ராக்டர்ஸ் நிறுவனத்துக்கு ந.க.எண்.10343/2016/இ3 நாள் 1.12.2016ன் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

 ஒராண்டு கழித்து, ந.க.எண்.10343/2016/இ3 நாள் 1.12.2017ன்படி 1.12.2017 முதல் 31.3.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 நவம்பர் 2016 முதல் ஜூலை 2017 வரை ஒவ்வொரு மாதமும் ரூ11,98,609 என ரூ1,17,46321(ரூ1.17கோடி) பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

  1. புதிய விளக்குகள் மாற்றும் போது, பழைய மின் விளக்குகள் மற்றும் அதன் பாகங்களை நகராட்சி மின் பணியாளர்களிடம் ஒப்படைத்து கையொப்பம் பெறவில்லை.
  2. பராமரிப்பு பகுதியிலுள்ள தானியங்கி சுவிட்சுகளை ஒப்பந்ததாரரே பராமரித்து, பழுதுகளை நீக்கி, அதற்கான பதிவேடுகளில் நகராட்சி பொறியாளரிடமிருந்து சான்று பெறப்படவில்லை.
  3. தெருவிளக்கு புகார் தொடர்பான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை.

உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

 மேலும் வி.கே.காண்ட்ராக்டர் பழுதுபார்புப் பணியினை மேற்க்கொண்டதை நகராட்சியின் பொறியாளர் கள ஆய்வு செய்யப்பட்டு உரிய பதிவேடுகளின் வழி உறுதி செய்யவேண்டும் .ஆனால் நகராட்சி பொறியாளர் கள ஆய்வு செய்யாமல் ஒப்பந்தகாரருக்கு பணம் பட்டுவாடா செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஒப்பந்த விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

ரூ.1.17கோடிக்கு தெரு விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு பட்டியல் மற்றும் இருப்பு பதிவேடுகள் இல்லை.

 மின்விளக்கு பொருட்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வாரண்டி உள்ள நிலையில், பராமரிப்பிற்கு எவ்வித கால இடைவெளியும் அளிக்கப்படாமல் ஒவ்வொரு மாதமும் தெருவிளக்கும், பொருட்களும் மாற்றப்படாமல்,  மாற்றப்பட்டதாக ஒப்பந்தகாரர் அளித்த பட்டியலை, ஏற்றுக்கொண்டு பணம் பட்டுவாடா செய்துள்ளார்.

    நகராட்சி பொறியாளர், ஆணையர் இருவரும் ஒப்பந்ததாரர் வி.கே காண்ட்ராக்டர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய இலஞ்சம் பல லட்சம் என்று நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்..

 தெரு விளக்கு பராமரிப்பு ஊழலில்  நகராட்சிக்கு ரூ1.17கோடி இழப்பு. ரூ.1.17 கோடி இழப்பு என்பது இலஞ்சமாக கைமாறியிருக்க வாய்ப்பு உள்ளது. அதனால்  1.12.2016 முதல் 31.3.2018 வரை நகராட்சி ஆணையராக இருந்த இரண்டு அதிகாரிகள், பொறியாளராக இருந்தவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மக்கள்செய்திமையம் புகார் அளித்துள்ளது.

 1.12.2016 முதல் 31.3.2018 வரை பணியாற்றிய இரண்டு ஆணையர்கள், பணியாற்றிய பொறியாளர்கள் யார்..யார்.. என்பது நகராட்சி நிர்வாக ஆணையருக்கு தெரியுமே நடவடிக்கை எடுப்பாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…

      சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், டெப்போக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களை URBASER SA – SUMEET FACILITIES LTD …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *