Breaking News
Home / பிற செய்திகள் / புதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை?

புதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை?

அதிமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராம பஞ்சாய்த்துகளில் உள்ள சாலைகளை பராமரிக்காமல், புதிய சாலைகள் போடாமல், போலி பில் மூலம் சாலைகளை பராமரித்தாகவும், புதிய சாலைகள் போட்டதாகவும் கோடிக்கணக்கில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் ஊழல் நடந்துள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரைக்குடி சாலை செல்லும் வழியில் பெரியபால தாண்டி இடது புறம் பிரிவுச் சாலையின் படம் தான் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த சாலை கருவிடைச்சேரி, இடையார், புதுவாக்கோட்டை, நால்ரோடு, செங்கரை வழியாக புதுவயல் சென்று காரைக்குடி செல்கிறது.

 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மணல் குவாரியால் குண்டு,குழியுமான சாலை. மணல் குவாரியில் மணல் எடுத்த புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிகாரமையத்தில் வலம் வரும் எஸ்.ஆர், அந்த ஊர் பிரமுகர்களுக்கும், கோயிலுக்கு என்று சில இலட்சங்களை அள்ளிவீசினார். அதனால் அந்த ஊர் பிரமுகர்கள் அப்போதும் வாயை திறக்கவில்லை. சாலை மோசமான நிலையை பார்த்தப்பிறகும் வாயை திறக்கவில்லை.

 ஆனால் என்னவோ இந்த சாலையைப்பற்றி மணல் குவாரி நடத்திய எஸ்.ஆரும் கவலைப்படவில்லை, அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்த சாலை வழியாக அரசு பேருந்து மூன்று, தனியார் பேருந்து ஒன்றும் தினமும் 17 முறை இயக்கப்படுகிறது.

 பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் என பயணிப்பவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எமனுக்கு பயந்து பயணம் செய்கிறார்கள்.

 இந்த போட்டோக்கள், மழை பெய்தவுடன் எடுத்தல்ல. மழை முடிந்து ஒரு நாள் கழித்து, 25.11.19ம் தேதி காலையில் எடுக்கப்பட்டது.

 மணல் குவாரி மூலம் அரசுக்கு கிடைக்க வருவாய் மற்றும் மணல் குவாரி எடுத்த எஸ்.ஆர் அடித்த கொள்ளையில் 200 கிமீட்டருக்கு தேசிய நெஞ்சாலை போல் சாலை அமைக்கலாம்.

 ஆனால் நான்கு கிமீட்டர் குண்டும் குழியுமான இந்த சாலை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கண்களுக்கு தெரியவில்லையே ஏன்?

Comments

comments

About mani bharathi

Check Also

மறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் 2015-16, 2016-17,2017-18,2018-19 ஆகிய நான்கு ஆண்டுகளில் நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *