Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி- கீரின் வாரியர்ஸின் குப்பை ஊழல்.. ஊழலில் சிக்கிய முஜிபுர்ரகுமானுக்கு பதவி உயர்வு..

ஆவடி மாநகராட்சி- கீரின் வாரியர்ஸின் குப்பை ஊழல்.. ஊழலில் சிக்கிய முஜிபுர்ரகுமானுக்கு பதவி உயர்வு..

ஆவடி மாநகராட்சி(ஆவடி பெரு நகராட்சி)யில் திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள கீரின்வாரியர்ஸ் நிறுவனம் குப்பைகளை சேகரிக்க 29 வார்டுகளுக்கு ஆட்கள் வழங்கி வருகிறது. 

 1.1.2014 முதல் 31.12.2016 வரை கீரின்வாரியர்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ5.60கோடி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது(ந.க.எண்.9303/2011/எச் 1 20.12.13).

 31.12.2016 ஒப்பந்தம் முடிவதற்கு 3மாதங்களுக்கு முன்பு, புதிய ஒப்பந்தம் கோர வேண்டும். ஆனால் புதிய ஒப்பந்தம் கோராமல், கீரின்வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஆவடி நகராட்சி ஆணையராக இருந்த முஜிபுர்ரகுமான், பொறியாளர் சீனிவாசன், பல லட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, விதிமுறைகளை மீறி சட்டத்துக்கு புறம்பாக 1.1.2017 முதல் 31.3.2017 முடியவும், மீண்டும் 1.4.2017 முதல் 30.6.2017 வரை, மீண்டும் 1.7.2017 முதல் 30.9.2017 வரை, மீண்டும் 1.10.2017 முதல் 31.3.2018 வரை  தற்போதைய விலை விகிதத்தில் பணியை தொடர அனுமதி அளித்துள்ளார்கள்.

22.9.2016க்கு முன்பு ஆவடி பெரு நகராட்சி ஆணையராக இருந்த பல லட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு கீரின் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு விதிமுறை மீறி சலுகைகள் வழங்கியுள்ளார்.

மூன்றாண்டு ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, புதிய ஒப்பந்த புள்ளி கோரப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு டெண்டர் டிரான்பரன்சி சட்டம் கூறுகிறது. ஆனால் அந்த சட்டத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, கீரின்வாரியர்ஸ் நிறுவனத்துக்கு பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 அதை விட ஊழல் என்ன வென்றால்.. கீரின் வாரியர்ஸ் நிறுவனம் 13.12.13ல் ரூ30 இலட்சத்துக்கு கொடுத்த வங்கி உத்திரவாதம் 10.4.2017 உடன் காலாவதியாகிவிட்டது. வங்கி உத்திரவாதம் புதுப்பிக்கப்படாமல், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கீரின்வாரியர்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 வங்கி உத்திரவாதம் இல்லாமல் 1.4.2017 முதல் பணி கீரின்வாரியர்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு  ஒப்பந்த பணி நீட்டிக்க முதலில் ஆணையர் முஜிபுர்ரகுமான், பொறியாளர் சீனிவாசனும், அடுத்து 1.7.2017- 31.3.2018 வரை  ஆணையராக இருந்த மதிவாணன், பொறியாளர் வைதிலிங்கம் கூட்டணி சட்டத்துக்கு புறம்பாக அனுமதி கொடுத்துள்ளார்கள்…

 குப்பை ஊழலில் சிக்கிய ஆணையர் முஜிபுர்ரகுமானுக்கு, செங்கல்பட்டு மண்டல துணை இயக்குநராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது..

   உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் செய்தால், பதவி உயர்வு கொடுக்கும் ஊழல் மாநிலம் தமிழ்நாடுதான்…

  கிரீன்வாரியர்ஸ் குப்பை ஊழல், தொடர்பாக  மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *