Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சியின் “420”- மேலாளர் பழனியின் ஆட்டம்…

திருவேற்காடு நகராட்சியின் “420”- மேலாளர் பழனியின் ஆட்டம்…

திருவேற்காடு நகராட்சி என்றாலே “420” நகராட்சி என்று உறுதியாகி உள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் 2005ன்படி கேட்ட சில தகவல்களின் ஆவணங்களை பெற ரூ220/- நகராட்சி கருவூலத்தில் 22.10.19ம் தேதி செலுத்தி, ரசீது நகலுடன் 23.10.19ம் தேதி பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பிய கடிதம் 24.10.19பெறப்படுகிறது.

 ஆவணங்களின் நகலை 16.11.19ம் தேதி வரை அனுப்பவில்லை. 16.11.19ம் தேதி பணம் செலுத்திய பிறகும் ஆவணங்களின் நகலை அனுப்பவில்லை என்று 16.11.19ம் தேதி மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பிய  அப்பீல் மனு 18.11.19ம் தேதி பெறப்படுகிறது.

 ஆனால் திருவேற்காடு நகராட்சியின் மேலாளர் பழனி, 14.11.19ம் தேதி ஆவணங்களை அனுப்பியதாக போலி கடிதம் தயார் செய்து, ஆவணங்களின் நகலை 22.11.19ம் தேதி பதிவு அஞ்சலில் அனுப்புகிறார். அந்த பதவி அஞ்சல் 23.11.19ம் தேதி மதியம் 3மணிக்கு கிடைக்கிறது.

 மேலாளர் பழனி, 22.11.19ம் தேதி பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு, உள்ளே உள்ள  கடிதத்தில் 14.11.19 என்று தேதியிட்டு கையெழுத்து போட்டு உள்ளார். ஆதாரங்கள் வெளியிட்டு உள்ளோம்.

 இதிலிருந்து திருவேற்காடு நகராட்சியின் நிர்வாகம் “420” என்பது உறுதியாகிறது.

          திருவேற்காடு நகராட்சியின் ஆணையராக, தலைமைச் செயலகத்திலிருந்து வந்த செந்தில்குமரன் டம்மியாம்..மேலாளர் பழனி தான் பவர்புல்லாம்….அம்மாடியோவ்…

Comments

comments

About mani bharathi

Check Also

மறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் 2015-16, 2016-17,2017-18,2018-19 ஆகிய நான்கு ஆண்டுகளில் நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *