Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி – வி.ஜி.என். பிராபர்ட்டி பெயரில்- ரூ50கோடி ஊழல்…

ஆவடி மாநகராட்சி – வி.ஜி.என். பிராபர்ட்டி பெயரில்- ரூ50கோடி ஊழல்…

ஆவடி பெரு நகராட்சி ஊழலில் சிக்கியிருந்தது ஆவடி மாநகராட்சியாக மாறிய பிறகு ஊழலில் மூழ்கிவிட்டது. 2017-18ம் ஆண்டில் ஆவடி பெரு நகராட்சி ஆணையர், பொறியாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் கூட்டணியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது.

 வி.ஜி.என் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு மனை  பிரிவு அனுமதி(7813/23.3.2018) 23.3.2018ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனைப் பிரிவில் சாலைகள் அமைக்க ரூ50 இலட்சமும், தெரு விளக்குகள் அமைக்க ரூ13 இலட்சம் ஆக மொத்தம் ரூ63 இலட்சத்துக்கு மதிப்பீடு தயாரித்து நகராட்சி பொறியாளர் 21.1.2018ல் வி.ஜி.என் பிராபர்ட்டி நிறுவனத்துக்கு ரூ63இலட்சத்தை நகராட்சியில் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பினார்.

 ஆனால் 10 நாட்களில்  நகராட்சி பொறியாளர் அதாவது 1.2.18 நாளிட்ட பரிந்துரையில் வி.ஜி.என் பிராபர்ட்டி நிறுவனம் மனைப் பிரிவில் உள்ள சாலைகள், தெரு விளக்குகளை அமைத்து நல்ல முறையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் வி.ஜி.என் பிராபர்ட்டி நிறுவனத்துக்கு அப்ரூவல் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

 ஆனால் கோப்பில் சாலைகள் போடப்பட்டதற்கு, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதற்கு எந்த புகைப்படங்களும் இணைக்கப்படவில்லை.

  வி.ஜி.என் பிராபர்ட்டி நிறுவனத்திடமிருந்து, ஆணையர், பொறியாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் ரூ30 இலட்சம் வாங்கிக் கொண்டு, வி.ஜி.என் நிறுவனத்துக்கு ஆதரவாக கோப்புகளில் எழுதியுள்ளார். இதனால் நகராட்சிக்கு ரூ63இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  2. வி.ஜி.என். டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு 1286 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடி நீர் வைப்புத் தொகை ரூ1,28,60,000(ரூ1.28கோடி), புதை வடிகால் வைப்புத் தொகை ரூ1,28,60,000/- ஆக மொத்தம் ரூ2,57,20,000(ரூ2.57கோடி) வசூலிக்கப்படவில்லை. ரூ2.57கோடிக்கு பதிலாக நகராட்சி அதிகாரிகள் ஒரு கோடி இலஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

3.  வி.ஜி.என் நிறுவனத்தின் திட்டம் அனுமதி எண். 428/09.8.17ல் கட்டிட பரப்பு 59,968.47 ச.மீட்டர். ஒரு சதுர அடிக்கு ரூ1500/- என தொழிலாளர் நல நிதி என 59,968.47 ச.மீட்டருக்கு ரூ96,82,509(ரூ96.82இலட்சம்) வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் குறைவாக வசூல் செய்த காரணத்தால் நகராட்சிக்கு ரூ47,88,409(ரூ47.88 இலட்சம்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

  உண்மையில் என்ன நடந்தது என்று நாம் விசாரித்த போது, வி.ஜி.என்.பிராபர்ட்டி, வி.ஜி.என் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்துடன்  நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் இலஞ்ச கூட்டணி அமைத்து 2016-17, 2017-18ல் ரூ50கோடிக்கு ஊழல் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.

 உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையின் பேரில் மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது. ஒரு சில நாட்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *