Breaking News
Home / பிற செய்திகள் / மறைமலை நகர் நகராட்சி திவாலாவா?- தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஊழல்…

மறைமலை நகர் நகராட்சி திவாலாவா?- தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஊழல்…

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடக்காத காரணத்தால், அதிகாரிகளின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தால், நகராட்சிகள் திவாலாகிக்கொண்டு இருக்கிறது. மறைமலைநகர் நகராட்சியில் எந்த கோப்பை பார்த்தாலும் ஊழல்..

  1. 2016-17ல் தெரு விளக்கு பராமரிப்பு பணி மேற்க்கொண்ட சன்வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் கோராமல் தி வாலாஜாபாத் அக்ரோ என்ஜினியரிங் & சர்வீஸ் கோ ஆப்ரேடிவ் செண்டர் லிமிட் என்ற நிறுவனத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 93.37 இலட்சத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வார்டு வாரியாக கம்பங்களின் பதிவேடு, பராமரிப்பு கம்பம் வாரியான பழுது விவரம் மற்றும் பராமரிப்பு பணி விவரம் அளவு புத்தகத்தில் பதிவு செய்யாமல், ஒட்டு மொத்தமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்கு ரூ31.12 இலட்சம் இழப்பு.
  2. குப்பைகளை அகற்றும் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சி நிதித் தணிக்கையில் பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரிக்கப்படாமல் பட்டியல் அனுமதிக்கப்பட்டதால் 2017-18ம் ஆண்டில் மட்டும் நகராட்சிக்கு ரூ13.60 இலட்சம் இழப்பு. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் ரூ40 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  3. பாலாஜி திருமண மண்டபம், ஸ்ரீவாரி திருமண மண்டபம், அண்ணாமலை திருமண மண்டபம், சமுதாய கூடம் திருமண மண்டபம், ஆதிலட்சுமி திருமண மண்டபம், DVP திருமண மண்டபம், SPM திருமண மண்டபம் ஆகிய திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காத காரணத்தால் ரூ15.12 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  4. தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் ஆர்.ஒ.சி எண்.30319/பி1/2015ன் நாள் 20.9.2017 ந் படி 2945 தனி நபர் கழிவறை திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி, மானிய தொகை ரூ1,76,70,000(ரூ1.76கோடி) உரிய கணக்கில் ஈடுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் 1160 தனி நபர் கழிவறைகள் மட்டுமே பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள கழிவறைகளின் நிலை என்ன? கட்டாத கழிவறைகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா? இப்படி பல கேள்விகளை உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கை எழுப்பி உள்ளது.

மறைமலை நகர் நகராட்சியில் 2015-16,2016-17, 2107-18 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஊழலால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 மறைமலைநகர்  நகராட்சியில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள்செய்திமையம் வழக்கு தொடரும்..

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *