Breaking News
Home / பிற செய்திகள் / சுகாதாரத்துறை- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்..

சுகாதாரத்துறை- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்..

தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் Tamilnadu Health system Projectல் முதலமைச்சர் சிறப்பு காப்பீட்டுத்திட்டத்தில் இணை இயக்குநராக  அதிகாரமையத்தில் வலம் வருபவர் டாக்டர் டி.எஸ் .செல்வவிநாயகம்.

  டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கூடுதல் இயக்குநர் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள Institute of community Medicine இயக்குநர். ஆனால் இந்த பதவிகளில் பணியாற்றாமல் கூடுதல் இயக்குநர் பதவியை வகிக்காமல், இணை இயக்குநர் பதவியில் முதலமைச்சர் சிறப்பு காப்பீட்டுத்திட்டத்தில் பணியாற்றுகிறார்.

 சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநரை எப்படி, இணை இயக்குநர் பதவியில் பணியாற்ற, சுகாதாரத்துறை அனுமதிக்கிறது என்று கேள்விகள் கேட்டு, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்..

  முதலமைச்சர் சிறப்பு காப்பீட்டுத்திட்டத்தில் நடக்கும் ஊழல், முறைகேடுகளின் பின்னணியில் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் இருப்பதாலும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆல் இன் ஆல் என்பதால் அயல்பணியில்  இணை இயக்குநர் அந்தஸில் அரசாணை எண்.934/29/7.2016 மூலம் முதலமைச்சர் சிறப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு சென்றுள்ளார்.

 அயல்பணி  என்றால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் என்பதால், அயல் பணி எல்லாம் கிடையாதாம். டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் தான் காப்பீட்டுத்திட்டத்தின் முழு பொறுப்பு இணை இயக்குநராம்..

    டாக்டர் செல்வவிநாயகம் பாவம்..சுகாதாரத்துறை மேம்படுத்த 24 மணி நேரமும் பொறுப்புள்ள மூன்று பதவிகளில் பணியாற்றுகிறார்கள் என்று கேள்விபடும் போது, அதிர்ச்சி அடைந்துவிட்டோம்.

   திருச்சி மாநகராட்சியில் 3.9.1996ல் சுகாதாரத்துறை அலுவலராக பணியாற்ற தொடங்கி, இன்று சுகாதாரத்துறையில் அதிகாரமையத்தில் வலம் வரும் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் வளையத்தில் சிக்கியுள்ளார்.

  டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் சொத்துக்கள் வாங்கு குவித்துள்ளார். வாங்கி சொத்துக்களுக்கு சுகாதாரத்துறையில் அனுமதி வாங்கியதாக தெரியவில்லை. ஏனென்றால் தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர மறுக்கிறார்கள்.

 சமீபத்தில் 5.6.2015ல்(பத்திர பதிவு எண்.4413/2015)குன்றத்தூர் ரோடு, கிருகம்பாக்கத்தில் வாங்கிய சொத்தை விலைக்கு வாங்கிய பத்திரம் நமக்கு கிடைத்த காரணத்தால் அதை வெளியிட்டு உள்ளோம். பல சொத்துக்களின் ஆதாரங்களை சேகரித்து வருகிறோம்.

  டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் வருமானத்துக்கு அதிகமாக மேலும் சொத்துக்களை வாங்க முன் கூட்டியே மக்கள்செய்திமையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *