Breaking News
Home / பிற செய்திகள் / தாம்பரம் பெரு நகராட்சி- ஒப்பந்ததாரர்களின் ஊழல் கூத்து..

தாம்பரம் பெரு நகராட்சி- ஒப்பந்ததாரர்களின் ஊழல் கூத்து..

தாம்பரம் பெரு நகராட்சியில் ஆணையர் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டணி அமைத்து, பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது. ஒப்பந்தகாரர்களுக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

 உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் ஒப்பந்ததாரர்கள் பற்றி, பல குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளது. ஆனால் தாம்பரம் பெரு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாக ஆணையரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் நகராட்சி அதிகாரிகளுக்கு கமிசன் கொடுப்பதால், நடவடிக்கை எடுக்கவில்லை என்று சில நேர்மையான அதிகாரிகள் புலம்பினார்கள்.

  1. டிரில்லர் மற்றும் டிப்பர் லாரி கொண்டு வட கிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ல நீர் வெளியேற்றம் செய்ய, டி.முனுசாமி என்ற ஒப்பந்ததாரருக்கு 28.11.17ல் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.ஒரு லாரிக்கு இரண்டு முறை வாடகை கொடுக்கப்பட்டுள்ளது. TN 25 X 4793 & TN 32 V7724 இரண்டு லாரிகளுக்கு முறைகேடாக இரண்டு முறை வாடகை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நகராட்சிக்கு ரூ2.85 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  2. சிம்லா கூல் மேக்கர்ஸ் ஒப்பந்ததாரருக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதால் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
  3. விஜய் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் 2015-16ல் ஒப்பந்த பதிவினை புதுப்பிக்கவில்லை. ஒப்பந்த பதிவை புதுப்பிக்காத நிலையில் 2015-16, 2016-17. 2017-18 ஆகிய ஆண்டுகளின் ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது.
  4. ஒப்பந்ததாரர்களாக 2016-17ல் பதிவு செய்ய ரூ21,000/-வசூல் செய்ய வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர்கள் கிருஷ்சந்தானம், எம்.கே.சி எண்டர்பிரைசஸ், சுராஜ், வி.மீனால் என்ஜினியரிங் காண்டிராக்டர், சந்திரன், சுமதி, ஸ்ரீபதமா கன்ஸ்டிரக்சன், கே.சி.பி என் ஜினியரிங் பிரைவேட் லிமிட், ஆர்.பி கன்ஸ்டிரக்சன், கருணாகரன் ஆகியோரிடம் ரூ11,000 வசூல் செய்த காரணத்தால் நகராட்சிக்குரூ1,31,000/- இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல்  விஜய் எலக்ட்ரிகல்ஸ், ஜெயபிரதாபன், விஜயராகவன் மூவரிடமும் 2016-17ம் ஆண்டில் ஒப்பந்ததாரர் பதிவு கட்டணம் தலா ரூ21,000 என ரூ63,000/ -வசூல் செய்யவில்லை.

இப்படி ஒப்பந்ததாரர்களிடம் தாம்பரம் பெரு நகராட்சி அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிக்கொண்டு ஒப்பந்ததாரர்களுக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சலுகைகள் அளித்த காரணத்தால் பல லட்சம் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா?

கொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *