Breaking News
Home / பிற செய்திகள் / அடுத்த உள்துறை செயலாளர்?- நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் ஒய்வு- அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் VS ராஜீவ்ரஞ்சன் ஐ.ஏ.எஸ்…

அடுத்த உள்துறை செயலாளர்?- நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் ஒய்வு- அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் VS ராஜீவ்ரஞ்சன் ஐ.ஏ.எஸ்…

தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் 30.11.2019ல் ஒய்வு பெறுகிறார். அடுத்த உள்துறை செயலாளராக நியமிப்பது தொடர்பாக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் இடையே ஆலோசனை நடந்து வருகிறது.

   டிபிட்கோ சேர்மன் கம் நிர்வாக இயக்குநராக இருக்கும் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ், ஜெயலலிதா முதல்வராக இருந்த உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு 2014 டிசம்பரில் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். உள்துறை செயலாளராக ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால்,  பீகார் மாநிலத்தை சேர்ந்த அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் உள்துறை செயலாளர் பதவிக்கு முயற்சி செய்கிறார்..

 மத்திய அரசின் வருவாய்த்துறையில் ஜி.எஸ்.டி  கவுன்சில் செயலாளராக பணியாற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ், உள்துறை செயலாளர் பதவிக்கு முயற்சி செய்கிறார். ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்  மத்தியமைச்சர்கள் சிலர் மூலம் சிபாரிசு செய்துள்ளார்.

 ஊரக வளர்ச்சித்துறை செயலாளரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரும் ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ் கோவை மாவட்ட அமைச்சர் மூலம் உள்துறை செயலாளர் பதவிக்கு முயற்சி செய்கிறார்..

 தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்த ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ், நில நிர்வாக ஆணையராக உள்ளார். ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ், சீனியராக உள்ளார். ஆனால் ஜெயக்கொடி உள்துறை செயலாளர் பதவிக்கு முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் டிசம்பர் 2019 ஒய்வு பெற்றுவிடுகிறார்.

 அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் அக்டோபர் 2020ல், ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் செப்டம்பர் 2020ல் ஒய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள். இந்த இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவரின் யாரை உள்துறை செயலாளராக நியமித்தாலும் ஒரு வருடம் கூட உள்துறை செயலாளராக பணியாற்ற முடியாது.

 2021ல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில் 2020ல் செப்டம்பர், அக்டோபருக்கு பிறகு புதிய உள்துறை செயலாளரை நியமிக்க வேண்டி இருக்கும் என்பதால் முதல்வர் பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் என்ன செய்வது என்று ஆலோசனை செய்து வருகிறார்கள்..

 1.12.2019ல் உள்துறை செயலாளராக பதவியேற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர்களுக்கு பத்திரிகை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோளுடன்  மக்கள்செய்திமையம் இப்போதே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

  Bold

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *