Breaking News
Home / பிற செய்திகள் / பல்லவபுரம் நகராட்சி- சரவணா செல்வரத்னத்தின் வணிக வளாகம்- விதிமுறைகளை மீறி கட்டிட பணிகள்..

பல்லவபுரம் நகராட்சி- சரவணா செல்வரத்னத்தின் வணிக வளாகம்- விதிமுறைகளை மீறி கட்டிட பணிகள்..

சென்னை அருகில் பல்லவபுரம் நகராட்சியில் உள்ள  ஜமீன் பல்லவபுரத்தில் Shri Rathna Akshaya Estates pvt ltd and Saravana Selvarathnam Retail pvt ltd இணைந்து 9மாடியில் துணிக்கடையுடன் கூடிய திரையரங்குகள் வணிக கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் 21.8.2019ல்(கடிதம் எண்.C3(S)/12059/2018 Dated 21.8.2019) அனுமதி அளித்துள்ளது.

 தரைத்தளத்துக்கு கீழ் இரண்டு தளம் பார்க்கிங், தரைத்தளம்  முதல் 5வதுதளம் வரை துணிக்கடை, 6வது மற்றும் 7வது தளத்தில் திரையரங்குகள், 8வது தளம், 9வதுதளம் அலுவலகம் இப்படி 9மாடி வணிக வளாகம் கட்ட சரவணா செல்வரத்னத்துக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 பல்லவபுரம் நகராட்சி ஆணையராக இருந்த எம்.செந்தில்முருகன், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்துக்கு சரவண செல்வரத்னம் வணிக வளாகம் கட்ட கொடுத்த என்.ஒ.சியில் ஜமீன்பல்லவபுரம் கிராமம் சர்வே எண்.39/10, 1B, 39/11,42/1,2,3,4,5,6,7,8,10,11A, 11B,12,13,14, 46/2,46/3, 46-6-3, 46/10-2 பிளாக் எண்.49, வார்டு-Dல் அமையும் இடத்திற்கு அருகில் Transfer station இயங்கி வருகிறது. எனவே திட்ட அனுமதி கோரும் இடத்தில் Transfer stationயை ஒட்டி சாலை, கட்டிட வரைபடத்தில் காட்டபப்ட்டுள்ளது. அதன் படி கட்டிட தாரரே காற்று மாசு உட்புறம் நுழைய வண்ணம் உரிய தடுப்புகள் முறைகள் அமைத்து தொழில்நுட்ப முறைபடி திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் என்ற குறிப்புரையுடன் திட்ட அனுமதி வழங்க, நகராட்சிக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறியுள்ளார்.

 இந்த கண்டிசனை தற்போது பல்லவபுரம் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தாமல், அதை ஆய்வு செய்யாமல், கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 அதே போல் சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் கொடுத்த அப்ரூவலில் The Loal Body is requested to ensure water supply and sewerage disposal faceility for the proposal issuing building permit. It shall be ensured that all wells, overhead tanks are hermaitcally sealed with properly protected vents to avoid mosquito menace என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் கண்டிசன்களை கண்காணிக்காமல், செயல்படுத்தாமல் பல்லவபுரம் நகராட்சி நிர்வாகம் சரவணா செல்வரத்தினம் வணிக வளாக கட்டிட பணிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

  இது தொடர்பாக சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்திற்கும், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறைக்கு ஆதாரங்கள், புகைப்படங்களுடன் கடிதம் அனுப்பி உள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *