Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி ஆணையர்- கிருஷ்ணமூர்த்தி மாற்றம் ஏன்?- சொத்து குவிப்பு வழக்கில் சிக்குகிறார்..

ஆவடி மாநகராட்சி ஆணையர்- கிருஷ்ணமூர்த்தி மாற்றம் ஏன்?- சொத்து குவிப்பு வழக்கில் சிக்குகிறார்..

தாம்பரம் நகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக மாற்றிய பெருமை ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு பெரும் பங்கு உண்டு. ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கிறது என்ற புகார்கள் குவிந்தது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார், பல தடவை கிருஷ்ணமூர்த்திக்கு செல்போன் செய்தார். செல்போனை எடுக்கவில்லை. அதனால் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யிடம் புகார் செய்தார். நகராட்சி நிர்வாக ஆணையர், கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.  கிருஷ்ணமூர்த்தி அலுவலகமே வருவதில்லை,அதனால் நிர்வாகம் மோசமாகிவிட்டது என்ற புகார் தொடர்ந்து வந்த காரணத்தால், வேலூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 கிருஷ்ணமூர்த்தியின் மகள் 4.9.2019 அன்று வேலப்பன்சாவடி கே.வி.என் திருமண மண்டபத்தில் நடந்தது. தாம்பரம் நகராட்சியில் ஊழல் செய்த பணத்தில் 436 பவுன் நகைகள், 30கிலோ வெள்ளி, அதி நவீன கார் உள்ளிட்ட மூன்று கார்கள் , கிழக்கு தாம்பரத்தில் 2000 சதுர அடியில் கட்டப்பட்ட வீடு ஆகியவைகளை பரிசாக கொடுத்து மகள் திருமணத்தை கோலகாலமாக நடத்தினார். கிருஷ்ணமூர்த்தியின் மகள் கோலகாலமாக திருமணம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார்கள் குவிய  கிருஷ்ணமூர்த்தி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த  வழக்கு தொடர முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகிறது.

  தாம்பரம் நகராட்சி ஆணையராக இருக்கும் போதும், ஆவடி மாநகராட்சி ஆணையராக இருக்கும் போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி தகவல்கள் கேட்டால் தரமாட்டார்.

  ஆவடி கோயில்பதாகை பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிப்பாளர்களுக்கு அப்ரூவல் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய ஆவடி நகராட்சி முன்னாள் ஆணையர், நகரமைப்பு ஆய்வாளர், நகரமைப்பு அதிகாரியை காப்பாற்ற, கோயில்பதாகை அப்ரூவல் கோப்புகளை அழித்துவிட்டார். இதற்கு பல லட்சம் இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரிகிறது.

 தாம்பரம் நகராட்சியில் கட்டிட அனுமதி வழங்கிய போது, சாலை அபிவிருந்தி கட்டணம் சாலையின் பரப்பளவிற்கு ரூ800/- சதுர மீட்டருக்கு கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். ஆனால் ஆணையாக இருந்த கிருஷ்ணமூர்த்தி குறைவாக வசூலித்த காரணத்தால், தாம்பரம் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 அதே போல் JANNURAM திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் நகராட்சி பங்கு தொகை இணைத்து பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. வணிகக் கட்டிட பாதாளச் சாக்கரை இணைப்பிற்கு நிர்ணயிக்கப்பட வைப்பு தொகையை விட குறைவாக வைப்புத் தொகையை ஆணையராக இருந்த கிருஷ்ணமூர்த்தி  வசூலித்த காரணத்தால், தாம்பரம் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 இப்படி தாம்பரம் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுத்திய கிருஷ்ணமூர்த்தி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு மக்கள்செய்திமையம் புகார் அனுப்பி உள்ளது.

  வேலூர் மாநகராட்சி ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பணியில் சேர்ந்தாலும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார் அல்லது விஜிலென்ஸில் சிக்கி கொள்வார்..

 ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை இனி ஒருவராலும் காப்பாற்ற முடியாது…

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *