Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி மாவட்டம்- பி.ஆர்.ஒ அலுவலகமா?-எம்.எல்.ஏ அலுவலகமா?..

தூத்துக்குடி மாவட்டம்- பி.ஆர்.ஒ அலுவலகமா?-எம்.எல்.ஏ அலுவலகமா?..

தூத்துக்குடி மாவட்டம் என்றாலே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சித் தலைவரை பார்க்க வந்தால், மாவட்ட ஆட்சித் தலைவர் அறைக்கு அருகில் குளு, குளு வசதியுடன் அதி நவீன பார்வையாளர் அறை உள்ளது. அந்த குளு குளு அறையில் சின்னப்பன் எம்.எல்.ஏ உட்கார்ந்து இருக்கலாம்..

 ஆனால் சின்னப்பன் எம்.எல்.ஏ பொது மக்கள் தொடர்புத்துறை அதிகாரி(பி.ஆர்.ஒ) அறைக்கு 4.11.19 காலை 11மணிக்கு வந்தார். அங்கு அமர்ந்திருந்த செய்தியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள்.  பி.ஆர்.ஒ இருக்கையில் அமர்ந்த சின்னப்பன் எம்.எல்.ஏ, அதிமுகவை சேர்ந்தவர்களிடம் மனுக்களை பெற்று ஆலோசனை நடத்தினார்.

 தன் இருக்கையில் எம்.எல்.ஏ அமர்ந்துக் கொண்டதால், என்ன செய்வது என்று தெரியாமல்  பி.ஆர்.ஒ சீனிவாசன் வலது பக்கம் அமர்ந்தார்..30 நிமிடம் அதிமுகவினரிடம் ஆலோசனை செய்துவிட்டு புறப்பட்டார்.

 பி.ஆர்.ஒ சீனிவாசன், மக்கள் பிரதிநிதி என்பதால், பி.ஆர்.ஒ சீட்டை விட்டுக்கொடுத்தேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்..

  பி.ஆர்.ஒ அலுவலகத்தில், பி.ஆர்.ஒ இருக்கையில் அமர்ந்து விளாத்திக்குளம் எம்.எல்.ஏ அதிமுகவினரிடம் மனுவை பெற்று ஆலோசனை செய்யலாமா என்று சபாநாயகர் மாண்புமிகு தனபால் அய்யாதான் பதில் சொல்ல வேண்டும்..

 இனி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள  பி.ஆர்.ஒ அலுவலகத்தில்,  பி.ஆர்.ஒ இருக்கையில் அமர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினரிடம் மனுக்களை பெறலாம், ஆலோசனை நடத்தலாம் என்று அறிவிப்பு வெளி வர வாய்ப்பு உள்ளது..

 பி.ஆர்.ஒ அலுவலகமா… எம்.எல்.ஏ அலுவலகமா என்று கேள்வி எல்லாம் கேட்காதீர்கள்.. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்..நமக்கேன் வம்பு…

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *