Breaking News
Home / பிற செய்திகள் / தாம்பரம் பெரு நகராட்சி- குறட்டைவிடும்.. உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை…

தாம்பரம் பெரு நகராட்சி- குறட்டைவிடும்.. உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை…

தாம்பரம் பெரு நகராட்சியின் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறையின் அறிக்கையை பார்த்தவுடன் நாம் அதிர்ச்சியாகிவிட்டோம்..உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை விதிமீறல்,  இலட்சக்கணக்கில் தாம்பரம் பெரு நகராட்சிக்கு இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  1. தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டுவது குறித்து விதிமுறையின் பயனாளியின் வங்கிக் கணக்கில்(ஜன்தன் கணக்கில்) செலுத்த வேண்டும். ஆனால் இரவி என்ற ஒப்பந்ததாரருக்கு 4.3.2016ல் தனி நபர் 9 கழிப்பிடங்களுக்கு ரூ72,000 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது..ஒப்பந்ததாரர் இரவியை கறுப்பு பட்டியலில் வைக்க வேண்டும்..
  2. சிம்லா கூல் மேக்கர்ஸ் நிறுவனத்தின் மீது 2015-16,2016-17,2017-18 ஆகிய மூன்றாண்டுகளில் உள்ளாட்சித்தணிக்கைத்துறை பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது.

உதாரணமாக தெரு விளக்கு பராமரிப்பில் சிம்லா கூல் மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 3மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகை ரூ24.90 இலட்சம்தான். ஆனால் சிம்லா கூல் மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ39,47,272 அதாவது ரூ39.47 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்கு இழப்பு ரூ14.57இலட்சம்..

 2016-17ல் தெருவிளக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்து கொடுத்த சிம்லா கூல் மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு பொருட்களுக்கான பட்டியல் இன்றி இன்வாய்ஸ் மூலம் விதிமுறைகளை,சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட தொகை ரூ18.56இலட்சம்..

 சிம்லா கூல் மேக்கர்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒப்பந்ததாரர் பட்டியலிருந்து நீக்கி கருப்பு பட்டியலில் வைக்கவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • விஜய் எலெக்ட்ரிக்கல் நிறுவனம் 2015-16ல் ஒப்பந்த பதிவினை புதுப்பிக்கவில்லை. ஆனால் விஜய் எலக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு 2015-16,2016-17ல் பல பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
  • கேபிள் டிவி வாடகை திருத்தம் சட்டம் வெளியிடப்பட்ட நிலையில் 1.4.2016 முதல் 31.3.2017 வரை ரூ22975 என 25கிமீ நீளத்திற்கு ரூ5,74,375 வசூல் செய்யாத காரணத்தால் நகராட்சிக்கு ரூ5.74 இலட்சம்  இழப்பு ஏற்பட்டுள்ளது.

2015-16,2106-17,2017-18ல் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியுள்ளபடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக விரிவான விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையம் புகார் கொடுத்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *