Breaking News
Home / பிற செய்திகள் / விழுப்புரம் மாவட்டம்- தள்ளுவண்டிதான் ஆம்புலன்ஸ்- சுகாதாரத்துறையின் அவல நிலை…

விழுப்புரம் மாவட்டம்- தள்ளுவண்டிதான் ஆம்புலன்ஸ்- சுகாதாரத்துறையின் அவல நிலை…

விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தை சேர்ந்த மல்லிகா, கணவர் சுப்ரமணியத்துடன் தமிழக –புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

 மல்லிகாவின் தங்கை பவுனுவின் கணவர், மல்லிகாவையும், சுப்ரமணியத்தை பார்க்க சுத்துக்கேணிக்கு செல்கிறார். சுப்ரமணியத்துக்கு உடல் நிலை மோசமாகி, மயக்க நிலையில் உள்ளார். தனியார் செங்கல் சூளை நடத்துபவரும் கண்டுகொள்ளவில்லை.

  சுத்துக்கேணியிலிருந்து, கோட்டக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 4கி.மீ செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் சுப்ரமணியத்தை படுக்க வைத்து, மல்லிகா தள்ளுவண்டியை இழுக்க, தங்கை பவுனுவின் கணவர் தள்ளுவண்டியை தள்ள, 4கி.மீ தூரம் தள்ளுவண்டியை தள்ளி சென்று கோட்டக்குப்பம் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு சென்றார்கள். வழியில் மல்லிகாவுக்கு உதவ ஒருவர் கூட முன்வரவில்லை.

 சுப்ரமணியை பரிசோதித்த கோட்டக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் சுப்ரமணி இறந்துவிட்டதாக கூறினார்கள்.

   இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

 ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் சுப்ரமணியின் உயிர் போனது தெரியாமல் சுப்ரமணியை தள்ளு  வண்டியில், தள்ளிக்கொண்டு கோட்டக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்ற கொடுமை தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது.. தமிழ்நாட்டில் மனிதநேயம் செத்து போச்சு..

  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதி நவீன உபகரணங்களுடன், அனுபவம் வாய்ந்த டாக்டர்களுடன் அரசு மருத்துவமனைகள் செயல்படுவதாக தினமும் பேட்டி அளித்துக் கொண்டு இருக்கிறார். வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் போட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்போகிறார்களாம்..

  தள்ளுவண்டியில் சுப்ரமணிய படுக்க வைத்து, 4 கிமீட்டர் தள்ளி செல்லும் காட்சியை பார்க்கும் போது தமிழக சுகாதாரத்துறை செயல்படுகிறதா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அய்யா.. முதலில் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிடுங்கள்..

  செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மருத்துவ உதவி கூட செய்ய மறுக்கும் தனியார் செங்கல் சூளை முதலாளி மீது  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

மறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் 2015-16, 2016-17,2017-18,2018-19 ஆகிய நான்கு ஆண்டுகளில் நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *