Breaking News
Home / பிற செய்திகள் / ஊரக வளர்ச்சித்துறை – சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- கூடுதல் இயக்குநர் ராஜஸ்ரீ..

ஊரக வளர்ச்சித்துறை – சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- கூடுதல் இயக்குநர் ராஜஸ்ரீ..

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றும் ராஜஸ்ரீ, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக, விஜிலென்ஸ் வளையத்தில் சிக்கியுள்ளார்.முகப்பேர் மேற்கு பாபாநகர் முதல் குறுக்குத் தெருவில் உள்ள தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட பல சொத்துக்களை விஜிலென்ஸ் துறை ஆய்வு செய்து வருகிறது.

 ஆனால் ராஜஸ்ரீ, அதிகாரமுள்ள பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பின்னணியில் இருப்பதால், எதைப்பற்றியும் கவலைபடாமல், அதிகாரமையத்தில் வலம் வருகிறார். ஊரக வளர்ச்சி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக  பாஸ்கர் ஐ.ஏ.எஸ் மூலம் அதிகாரமுள்ள பதவிகளை பெற்று, பல முறைகேடுகள் செய்தார் என்று தெரிகிறது.

  ராஜஸ்ரீயின் உடன் பணியாற்றிய பொன்னையா, ராசாராம், மேகராஜ், புஷ்பராஜ் உள்ளிட்டவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றுகிறார்கள். ஆனால் ராஜஸ்ரீ இன்னும் ஐ.ஏ.எஸ் கிடைக்கவில்லை. பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஆணையராக/இயக்குநராக இருக்கும் போது, மேகராஜ் ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைத்தவுடன் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டும் பணிக்கான பதவியை பெற்று கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக விஜிலென்ஸ் இயக்குநரகத்துக்கு புகார்கள் குவிந்துள்ளது.

 பாஸ்கர் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டதால், ராஜஸ்ரீக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..

  அடுத்த வரும் ஐ.ஏ.எஸ் பதவி உயர்வில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவிக்கு முத்துமீனாளுக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைக்காமல், முத்துமீனாளுக்கு எதிராக செயல்பட்டு, ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு பெற  ராஜஸ்ரீமுயற்சி செய்து வருகிறார்.

 ஆனால் விஜிலென்ஸில் ராஜஸ்ரீ மீது  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தால் ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைக்காது என்பதால், தமிழக அரசின் உயர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் விஜிலென்ஸ் இயக்குநரகத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

  பார்ப்போம்.. என்ன நடக்கிறது.. ராஜஸ்ரீக்கு ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு கிடைக்குமா? ..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *