Breaking News
Home / பிற செய்திகள் / சுஜீத்வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள்- மக்கள்செய்திமையம் ரூ5000/- நிதியுதவி- நடுக்காட்டுப்பட்டியில் அதிர்ச்சி தகவல்கள்..

சுஜீத்வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள்- மக்கள்செய்திமையம் ரூ5000/- நிதியுதவி- நடுக்காட்டுப்பட்டியில் அதிர்ச்சி தகவல்கள்..

மக்கள்செய்திமையம் சுஜீத்வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் என்று 12 கேள்விகளை செய்தியாக வெளியானது. ஹலோ அப்பில் இந்த செய்தியை 11 இலட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.மக்கள்செய்திமையம் வாட்ச் அப் குரூப் மக்கள்செய்திமைய.காம், டியூட்டர், மற்ற வாட்ச் அப் குரூப் மூலம் 2 இலட்சம் பேர் பார்த்துள்ளார்கள். 13 இலட்சம் பேர் பார்த்த மக்கள்செய்திமையத்தின் செய்தியை, ஏனோ..திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை. அதனால் தான் DT நெக்ஸ்ட் பத்திரிகையை பார்த்து, அறிக்கை அளித்துள்ளார். DT நெக்ஸ்ட் பத்திரிகையின் தமிழ் நாளிதழில் இந்த செய்தி ஏன் வெளியிடவில்லை.

 30.10.19 காலை 12.30மணியளவில் மக்கள்செய்திமையத்தின் திருச்சி மாவட்ட நிருபர் ராஜா,புதுக்கோட்டை மாவட்ட நிருபர் சரவணக்குமார் இருவரும் சுஜீத்வில்சன் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ், தாய் கலாராணி இருவரையும் சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவர்களிடம் MAKKALSEITHIMAIYAM NEWS(OPC)LTD சார்பில் ரூ5000/- நிதி வழங்கப்பட்டது.

 நமது நிருபர்கள் சுஜீத்வில்சன் வீட்டிற்கு சென்ற போது, மீட்பு பணியில் என்ற பெயரில் நடந்த கூத்தால் தோண்டப்பட்ட பள்ளங்களால் வீட்டை சுற்றி மழை நீர் தேங்கி நின்றுக்கொண்டு இருந்தது.

  1. சுஜீத்தின் தாய், தந்தை இருவரும் சுஜீத்தை அடக்கம் செய்த இடத்தில் மாலையிட்டு, பிராத்தனை செய்யாமல், சுஜீத் விழுந்த போர்வெல் துளையில் மாலையிட்டு, அழுதபடியே பிராத்தனை செய்துக்கொண்டு இருந்தார்கள். ஏன் என்ற கேள்வி நமக்கு எழுந்துள்ளது.
  2.  சுஜீத் விழுந்த போர்வெல்துளையில் இருந்த சுஜீத்தின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை, சிதைந்த நிலையில் உள்ள உடலின் சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிறகு எதாவது பிரச்சனை வரும் என்பதால், அவசரம், அவசரமாக கான்கிரிட் கலவை மூலம் சுஜீத் விழுந்த போர்வெல் துளை மூடப்பட்டுள்ளது என்ற உண்மை நமக்கு கிடைத்தது. இது தொடர்பாக அதிகாரிகள் நம்மிடம் பேச மறுத்துவிட்டார்கள்..
  3. சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி, சமூக வலைதளங்களில்  பரவ, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட 12 மீட்புக் குழுக்கள் சுஜித் விழுந்த இடத்திற்கு அக்டோபர் 26-ஆம் தேதிதான் வந்தன. சிறுவனை மீட்க ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மணி நேரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஒதுக்கிக் கொடுத்து முயற்சி செய்தார். உயிருள்ள – ஆனால் உயிருக்காகப் போராடும் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றுக்குள் வைத்துக் கொண்டு,  மாவட்ட ஆட்சித் தலைவர் இப்படியொரு சோதனை  முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஏன்?
  4. உடல் கூறு முடிந்தவுடன், சுஜீத் உடலை தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் பெற்றுக்கொண்டதாக, பிரேத பரிசோதனைக்கான புத்தகத்தில் கையெழுத்து போட வேண்டும். யார் கையெழுத்து போட்டது என்ற விவரங்களை வெளியிடுவார்களா?

   மக்கள்செய்திமையத்தின் ஆசிரியர், நிருபர்களின் மனம் இரும்பாலானது இல்லை. சுஜீத்தின் மரணத்தில் மறைக்கப்பட்டத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை கேள்விகளாக எழுப்ப இனி விரும்பவில்லை.

   இனி சுஜீத்வில்சன் நிலை தமிழ்நாட்டில் எந்த குழந்தைக்கு ஏற்படாமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும் என்று மக்கள்செய்திமையம் தமிழக மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *