Breaking News
Home / பிற செய்திகள் / சுஜீத்வில்சன் மரணத்தில்- எழுந்துள்ள சந்தேகங்கள்- உடற்கூறு வீடியோ வெளிடுவார்களா?..

சுஜீத்வில்சன் மரணத்தில்- எழுந்துள்ள சந்தேகங்கள்- உடற்கூறு வீடியோ வெளிடுவார்களா?..

திருச்சி மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ ஆரோக்கியராஜ் , கலாராணி தம்பதியின் 2வயது மகன் சுஜீத்வில்சன், மூடப்படாத 600 அடிக்கு போடப்பட்ட போர்வெல் துளையில் 25.10.19ம் தேதி மாலை 5.40க்கு விழுந்தான். 82 மணிநேரம் கழித்து சிதைந்த உடல் மீட்கப்பட்டதாக அறிவித்தார்கள்..

  சுஜீத்வில்சன் போட்டோவை பார்க்கும் போது எல்லாம், கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது..

           சுஜீத் வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள்…

  1. 28ம் தேதி நள்ளிரவு 12மணிக்கு 55 அடிதான் தோண்டி இருக்கிறோம் என்றார்கள். இந்த 55 அடி தோண்ட மூன்று நாட்களாகியது.இரவு 2.30மணிக்கு துர்நாற்றம் வீசுகிறது என்றார்கள். அடுத்த சில மணி நேரத்தில் மீது 45 அடியை அசுரவேகத்தில் தோண்டி, சுஜீத் விழுந்த ஆழ்குழாய் துளையுடன் இணைப்பை ஏற்படுத்தி சுஜீத்தின் சிதைந்த சடலைத்தை மீட்டுவிட்டோம் என்கிறார்கள்.. நம்பமுடியவில்லை..
  2. சுஜீத் உடல் மீட்கப்பட்ட காட்சியை ஏன் வெளியிடவில்லை. மீட்கப்பட்ட காட்சியை வெளியிடுவார்களா?
  3. மீட்ட பின்பு சுஜீத் உடலை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை ஏன்?
  4. சிதைந்து போன சுஜீத் உடலை புளு கலர் பிளாஸ்டிக் பையில் எடுத்து வருபவர் மாஸ்க் கூட போடவில்லையே?
  5. சுஜீத் உடல் மீட்கபட்டு உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு, சொற்பநேரத்தில் வெளியே கொண்டு வந்து, அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டுவிடுகிறது. அவ்வளவு அவசரம் ஏன்?
  6. உடற்கூறு சட்டத்தின் படி மாலை 6மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6மணிவரை உடற்கூறு செய்ய முடியாது. சுஜீத் உடல் விடியற்காலை 4.30 – 5மணிக்கு உடற்கூறு எப்படி செய்யப்பட்டது?
  7. உடற்கூறு செய்யும் போது வீடியோ எடுக்கப்பட்டதா.. உடற் கூறு வீடியோவை வெளியிட தயாரா?
  8. மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜீத்தின் உடலை உடற்கூறு செய்த டாக்டர்களின் விவரங்கள் வெளியிடுவார்களா?
  9. சுஜீத்தின் சிதைந்த உடலை மீட்கும் போது, சுஜீத்தின் பெற்றோர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்களை நெருங்கவிடவில்லை ஏன்?
  10. சுஜீத்தின் சிதைந்த உடலை மீட்கப்பட்டதாக கூறியவுடன், ரெடிமேடு கான்கிரிட் கலவை லாரி கொண்டு வரப்பட்டு சுஜீத் விழுந்த ஆழ்குழாய் துளையில் கான்கிரிட் கலவையால் மூடப்பட்டதில் சந்தேகம் எழுந்துள்ளது. ரெடிமேட் கான்கிரிட் கலவை லாரி, எப்போது கொண்டு வரப்பட்டது.. விடியற்காலை நேரத்தில் வந்த ரெடிமேடு கான்கிரிட் கலவை லாரிக்கு எப்போது சொன்னார்கள்..
  11.  உண்மையில் சுஜீத்தின் சிதைந்த உடல் மீட்கப்பட்டு இருந்தால், சிதைந்த உடலின் எடை அதிகபட்சம் 6கிலோ தான் இருக்கும். சிதைந்த உடலை பிளாஸ்டிக் உறையில் போட்டு தூக்கி வருபவரை போட்டோவில் பாருங்கள்.. பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்..
  12. சுஜீத் உடல் சிதைந்து 10மணி நேரமாகிவிட்டது. சுஜீத் இறந்து பல மணி நேரங்கள் கழித்துதான் சிதைந்து என்று சில நேர்மையான அதிகாரிகள் கூறுகிறார்கள். அந்த அதிகாரிகளின் கூற்றின்படி பார்த்தால் சுஜீத் இறந்து 15மணி நேரம் முதல் 20 மணி நேரமாகியிருக்கலாம். அப்படி இருக்கையில் 28.10.19 நள்ளிரவு மீட்பு பணி என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய அவசியம் என்ன?

சுஜீத் மரணம் தொடர்பான பல மர்ம முடிச்சுக்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது..அதிகாரவர்க்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும், இந்த தமிழ்நாட்டில்…

 சுஜீத் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நடுக்காட்டுப்பட்டி மக்களுக்கும் மக்கள்செய்திமையம் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *