Breaking News
Home / பிற செய்திகள் / சுஜீத்வில்சன் சிதைந்த நிலையில் உடல் மீட்பு… 6மணி நேரத்தில் இறந்த சுஜீத்வில்சனுக்கு.. 80 மணி நேரம் மீட்பா?- மக்கள்செய்திமையம் ஆழ்ந்த இரங்கல்…

சுஜீத்வில்சன் சிதைந்த நிலையில் உடல் மீட்பு… 6மணி நேரத்தில் இறந்த சுஜீத்வில்சனுக்கு.. 80 மணி நேரம் மீட்பா?- மக்கள்செய்திமையம் ஆழ்ந்த இரங்கல்…

திருச்சி மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ ஆரோக்கியராஜ் , கலாராணி தம்பதியின் 2வயது மகன் சுஜீத்வில்சன், மூடப்படாத 600 அடிக்கு போடப்பட்ட போர்வெல் துளையில் 25.10.19ம் தேதி மாலை 5.40க்கு விழுந்தான்.

     5அடியில் சிக்கியிருந்த சுஜீத்வில்சன், 20 அடிக்கும் அடுத்து 26அடிக்கு தள்ளப்பட்டான். 2வயது சிறுவன் சுஜீத்வில்சன் போர்வெல் குழியில் விழுந்து 26 அடிக்கு தள்ளப்பட்டு பிறகு அதிகபட்சமாக 6மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அங்கிருந்து அதிகாரிகளுக்கு தெரியும்.

     செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்ததே தவறு..26அடியிலிருந்து சுஜீத்வில்சன் 88அடிக்கு தள்ளப்பட்டான். மேலும் சுஜீத் வில்சன் கீழே இறங்காமல் இருக்க 88அடியில் ஏர் லாக் செய்துள்ளதாக அமைச்சர்கள், அதிகாரிகள் அறிவித்தார்கள். உண்மையில் ஏர் லாக் செய்யும் போது, சிறுவன் உயிருடன் இல்லை என்பது தெரிந்திருக்கும்.. ஆனால் உண்மையை வெளியே சொல்லாமல் 80மணி நேரம் வரை மீட்பு என்ற பெயரில் துயர நாடகத்தை அரங்கேற்றினார்கள்..

 பல்வேறு துறைகள், பல்வேறு துறைசார் நிபுணத்துவம் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றும் வகையிலான ஒரு மீட்புப் படை அரசிடம் இல்லை – இருக்கும் குழுவிடம் போதிய கருவிகளும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகின்றது.

   ஒரு திட்டத்தை முயற்சிக்கும் போதே அதன் பின் விளைவுகள், அதன் அதிகபட்ச திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றை முன்னேற்பாடு செய்து கொள்ளும் எந்த வழிமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை.  ஒரு திட்டம் தோல்வியடைந்த பின்னர்தான் அடுத்த திட்டம் குறித்து யோசிக்கிறது அதிகாரவர்க்கம்.   அதன் காரணமாகவே அடுத்த திட்டத்திற்கான கருவிகள் வரவழைப்பதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

  நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நம் நாட்டில் 88 அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை.

  அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர் மீது  23 பொய் வழக்குகள் போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து, 119 நாட்கள் கோவை தனிமை சிறையில் அடைத்து வைக்கும் மனோபாவம் உள்ள அரசும், அமைச்சர்களும்,அதிகார வர்க்கமும் இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேற வாய்ப்புகள் இல்லை…

ரபேல் விமானத்துக்கு எழுமிச்சப்பழம் வைத்து போட்டோ போஸ் கொடுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கு,  மனித இழப்பைத் தடுக்கும் கருவிகளையும் கட்டமைப்பையும் உருவாக்கும் எண்ணம் துளியும் இல்லை. குடிமக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசால் மட்டுமே இச்சமூக அவலங்களைப் போக்க முடியும். அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்திருக்கும் ஒரு அரசுக் கட்டமைப்பிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா ?

 இரக்கமற்ற இந்தியாவில் வாழ்வதைவிட இறப்பது மேல் என சுஜீத்வில்சன் நினைத்துவிட்டான்..

  சுஜீத்வில்சனுக்கு மக்கள்செய்திமையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Comments

comments

About mani bharathi

Check Also

ஆனந்தவிகடன் நிர்வாகம் பணி நீக்கம் செய்த 176 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்..மக்கள்செய்திமையம் பணிவான வேண்டுகோள்…

Posted by Anbu Azhagan on Friday, May 22, 2020 Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *