Breaking News
Home / பிற செய்திகள் / டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு & கட்டுப்படுத்த- மாதம் ரூ100கோடிக்கு பில்- ஆண்டுக்கு ரூ1200கோடிக்கு பில்- டெங்கு காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு எப்படி?

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு & கட்டுப்படுத்த- மாதம் ரூ100கோடிக்கு பில்- ஆண்டுக்கு ரூ1200கோடிக்கு பில்- டெங்கு காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு எப்படி?

    உள்ளாட்சி அமைப்புகளில் அதாவது நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல், கொசு மருந்து அடித்தல், நில வேம்பு நீர் கொடுத்தல் என்ற பெயரில் மாதம் ரூ100கோடிக்கு மேல் பில் போடப்படுகிறது. ஆண்டுக்கு ரூ1200கோடிக்கு பில் போடப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ6000/-கோடிக்கு பில் போடப்பட்டுள்ளது.

 உண்மையில் மாதா மாதம்  ரூ100கோடி டெங்கு காய்ச்சலுக்கு செலவு செய்திருந்தால், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் கூட பாதிக்கப்பட்டு இருக்குமாட்டார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 பேர். ஆனால் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

 டெங்கு காய்ச்சல் பெயரில் மாதா, மாதம் ரூ100கோடிக்கு போலி பில் போட்டு, அதிகாரிகள் கொள்ளையடித்துள்ளது உறுதியாக தெரிகிறது.

  1. பூந்தமல்லி நகராட்சி Ourland engineering works பெயரில் மாதம் ரூ25இலட்சம் மற்றும் சில நிறுவனங்கள் பெயரில் ரூ5 இலட்சம் என டெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ30 இலட்சம் பில் போடப்படுகிறது.
  2. திருவேற்காடு நகராட்சியில் பல நிறுவனங்கள் பெயரில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துதல் பெயரில் மாதம் ரூ30இலட்சம் பில் போடப்படுகிறது.
  3. ஆவடி மாநகராட்சி டெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ55இலட்சம் பில் போடப்படுகிறது.
  4.  தாம்பரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ50இலட்சம் பில் போடப்படுகிறது.
  5. திருப்போரூர் பேரூராட்சியில் 4.4.2017 முதல் 29.1.18 வரை டெங்கு காய்ச்சல் பெயரில் போடப்பட்ட பில்லின் மதிப்பு ரூ 5இலட்சம். 2018 முதல் மாதம் ரூ2 இலட்சம் பில் போடப்படுகிறது.
  6. பல்லவபுரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ40இலட்சம் பில் போடப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு நகராட்சியிலும், ஒவ்வொரு பேரூராட்சியிலும், ஒவ்வொரு நகராட்சியிலும், ஒவ்வொரு மாநகராட்சியிலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல், கொசு மருந்து கொள்முதல், பிளிச்சீங் பவுடர் கொள்முதல், கொசு மருந்து இயந்திரம் கொள்முதல் பெயரில் மாதா மாதம் ரூ100கோடிக்கு பில் போடப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ1000 முதல் ரூ1200கோடிக்கு பில் போடப்படுகிறது.

  மாதா மாதம் ரூ100கோடிக்கும், ஆண்டுக்கு சுமார் ரூ1200கோடியும் டெங்கு காய்ச்சலுக்கு செலவு செய்யப்பட்டு இருந்தால் டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டு பக்கம் தலையே காட்டியிருக்காது. டெங்கு காய்ச்சலில் ஒருவர் கூட பலியாகி இருக்கமாட்டார்கள். சுகாதாரத்துறை செயலாளர் சொல்வது போல் 3000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்.

  உள்ளாட்சி அமைப்புகளில் டெங்கு காய்ச்சல் பெயரில் மாதா, மாதம் ரூ100கோடிக்கு போலி பில்லா.. ஆண்டுக்கு ரூ1200 கோடி போலி பில்லா.. அம்மாடியோவ்..

  மக்கள்செய்திமையம் டெங்கு காய்ச்சல் பெயரில் போலி பில்லுக்கான ஆதாரங்களை டன் கணக்கில் வெளியிட தயார்… நடவடிக்கை எடுக்க தயாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *