Breaking News
Home / பிற செய்திகள் / விக்ரவண்டி தொகுதி இடைத்தேர்தல்- மே 1969ல் மறைந்த கோவிந்தசாமிக்கு 2021 தேர்தலில் ஆட்சி அமைத்தால் மணிமண்டபமாம்..வெட்ககேடு…

விக்ரவண்டி தொகுதி இடைத்தேர்தல்- மே 1969ல் மறைந்த கோவிந்தசாமிக்கு 2021 தேர்தலில் ஆட்சி அமைத்தால் மணிமண்டபமாம்..வெட்ககேடு…

முகையூர் தொகுதி திமுக  சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி 18.5.1969ல் மறைந்தார். ஏ.கோவிந்தசாமி மறைவுக்கு பிறகு திமுக 1971ல், 1989-1991, 1996-2001, 2006-11 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு ஏன் மணிமண்டபம் கட்டவில்லை. 2021 திமுக ஆட்சி அமைந்தவுடன் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படுமாம்.. என்ன வேடிக்கை..என்ன கேவலம்..

  முன்னாள் அமைச்சர் பொன்முடியால், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக உள்ள வன்னியர்கள் ஒரங்கப்பட்டப்பட்டுவிட்டார்கள் என்பது மு.க.ஸ்டாலினுக்கு எப்படி தெரியாமல் போனது..

      ஏ.கோவிந்தசாமியின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏவுமான  ஏ.ஜி.சம்பத், முன்னாள் அமைச்சர் பொன்முடியால் ஒரங்கட்டப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். திமுக தலைவர் கலைஞரிடம் முறையிட்டார். ஆனால் பொன்முடி, மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் ஏ.ஜி.சம்பத்துக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் தடுமாறினார் கலைஞர்.

 ஏ.ஜி.சம்பத் முகையூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பிறகு தேமுதிகவில் சேர்ந்தார். தேமுதிகவிலிருந்து விலகி சுமார் 2000 பேருடன் பத்திரிகையாளர் அன்பழகன்(அன்பு) முயற்சியாலும், சன் டிவி நிர்வாகிகள் தயாநிதிமாறன், கலாந்திமாறன் ஒத்துழைப்புடன் மீண்டும் திமுகவில் சேர்ந்தார். ஆனால் ஏ.ஜி.சம்பத் ஒரங்கட்டப்பட்டார்..

 விக்ரவண்டி சட்டமன்றத் தொகுதி என்பது பழைய முகையூர் தொகுதியை உள்ளடக்கியதுதான்.

 விக்ரவண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பொன்முடியின் கைத்தடி புகழேந்தி களத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளராக முத்தமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.

 திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு செல்வாக்கு அதிகம், மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம். அதனால் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என்பதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகள் கழித்து முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி பெயரை ஞாபகப்படுத்தியுள்ளார்.

  உதயசூரியன் சின்னம், திமுகவின் சின்னம் கிடையாது.. ஏ.கோவிந்தசாமி, திமுகவுக்கு கொடுத்த சின்னம் தான் உதயசூரியன்…

  விக்ரவண்டி தொகுதியில் உள்ள முகையூர் பகுதிகளில் ஏ.கோவிந்தசாமி பெயரை சொல்லாமல் ஏ.ஜி.சம்பத் ஆதரவில்லாமல் வாக்குகள் பெற முடியாது.

  திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வேறு வழி இல்லாமல் 50 ஆண்டுகள் கழித்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் அறிவித்தவுடன் ஏ.கோவிந்தசாமி மகன் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  விக்ரவண்டி தொகுதி தேர்தலில் முகையூர் பகுதிக்கு ஏ.ஜி.சம்பத்துடன் பணியாற்ற முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 விக்ரவண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.

 விக்ரவண்டி இடைத்தேர்தலால், 50 ஆண்டுகள் கழித்து ஏ.கோவிந்தசாமி பெயர் நினைவுக்கு வந்ததற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

                        மக்கள்செய்திமையம் மக்களுக்காக

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *