Breaking News
Home / பிற செய்திகள் / புதுக்கோட்டை – உப்பிலியக்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட தடுப்பணையின் அவல நிலை- தடுப்பணையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மொழி.

புதுக்கோட்டை – உப்பிலியக்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட தடுப்பணையின் அவல நிலை- தடுப்பணையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மொழி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மகா கேவலமாக காட்சியளிக்கிறது.

 புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், உப்பிலியக்குடி ஊராட்சியில்   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்(2018-19) ரூ3.33இலட்சத்தில் கட்டப்பட்ட அட்டக்குளம் வரத்துவாரியில் காங்கிரேட் தடுப்பணையின் அவல நிலையை பாருங்கள்..    

 தடுப்பணை முழுவதும் சிதைந்து, ஆங்காங்கே வெடித்தும் காணப்படுகிறது.

   அதைவிட தடுப்பணை என்று வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழி கொலை செய்யப்பட்டுள்ளது..

  1. வருத்துவாரி 2. தொழிளாலர் மற்றும் தொழிளாலர்கள் ரூ38,142/-  இப்படி தமிழ் மொழி கொலை செய்த குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர்/ வளர்ச்சி திட்ட பிடிஒ வேலு அய்யாவுக்கு என்ன விருது வழங்கலாம் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..

     இதில் என்ன வேடிக்கை என்றால்..குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற விராலிமலை தொகுதியில் இல்லை. கந்தவர்க்கோட்டை தொகுதியில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் என்பதால், வேலு அய்யாவுக்கு என்ன விருது வழங்கலாம் என்று முடிவு செய்யலாமே? BOLD..

                        மக்கள்செய்திமையம் மக்களுக்காக       

Comments

comments

About mani bharathi

Check Also

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *