Breaking News
Home / பிற செய்திகள் / சீரழிக்கப்பட்ட பூம்புகார்(காவிரிப்பூம்பட்டினம்)- விபச்சாரம் & டாஸ்மாக் பாராக மாறிய பூம்புகார்..

சீரழிக்கப்பட்ட பூம்புகார்(காவிரிப்பூம்பட்டினம்)- விபச்சாரம் & டாஸ்மாக் பாராக மாறிய பூம்புகார்..

சோழ நாட்டின் முக்கிய நாகரிக அடையாளமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி 500ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த துறைமுகம் புதையுண்டு போனது.

  அறிஞர் அண்ணா அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பூம்புகார் அருகே நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய சம்பந்தம் பிள்ளை, “கோவலன்-கண்ணகி வாழ்ந்த ஊரை உலகறியச் செய்யுங்களேன்” என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், கலைஞர் பதில் ஏதும் சொல்லாமல் போய்விட்டார். அடுத்து, சில மாதங்கள் கழித்து தஞ்சாவூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை சம்பந்தம் பிள்ளை வைத்தார். “நிச்சயம் செய்வேன்” என்று அச்சமயம் உறுதிகொடுத்தார் கலைஞர். இதை மனதில் வைத்து, 1971ல் கலைஞர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பூம்புகார் நகரை உருவாக்கத் திட்டம் தீட்டினார்.

1973-ல் பூம்புகார் சுற்றுலா நகரை மக்கள் பார்த்து மகிழ திறந்துவைத்தார். திறப்பு விழாவுக்காகப் பூம்புகார் நகருக்கு வந்த கலைஞருக்கு, அதன்பிறகு அந்த நகருக்கு வர வாய்ப்பே கிடைக்கவில்லை. கலைஞருக்குப் பின் ஆண்ட ஆட்சியாளர்கள் பூம்புகாரைப் பராமரிக்க தவறியதால் இன்று பொலிவிழந்து கிடக்கிறது. என்றாலும் கலைஞர் கருணாநிதியின் புகழ் மறையாமல் காட்சியளிக்கிறது..                                                                                         

Comments

comments

About mani bharathi

Check Also

புதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *